இரட்டை மடிப்பு வலை விவகாரம் ஆறு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இரட்டை மடிப்பு வலை பயன்படுத்தும் விவகாரத்தில் ஆறு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசு தடை விதித்தாலும், பின்னர் கடந்த 2014ம் ஆண்டு இரட்டை மடிப்பு வலைகளை பயன்படுத்துவதில் சில நிபந்தனைகளோடு கூடிய அனுமதியை வழங்கியது. இரட்டை மடிப்பு வலையை … Read more

’தீயணைப்புத் துறையினருக்கும் சலுகைகள் வழங்குக’ – ஓய்வுபெற்ற டிஜிபி கோரிக்கை

“காவல்துறையினரை போலவே தீயணைப்புத் துறையினருக்கும் பல சலுகைகளை வழங்க வேண்டும்” என ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை டிஜிபி கரன்சின்ஹா கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் இயக்குநரும், டிஜிபியுமான கரன்சின்ஹா, இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். … Read more

“நீங்கள் இல்லாவிட்டால் இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்கவே முடியாது” – யுவன்

‘ரசிகர்களால் தான் 25 வருடத்தை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளேன். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்’ என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த முதல் திரைப்படமான அரவிந்தன் படம் கடந்த 1997ம் ஆண்டு இதே நாள் வெளியானது. திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், யுவன்சங்கர்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. என் அன்பையும், நன்றியையும் எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் … Read more

பஹ்ரைனில் ‛வலிமை' கொண்டாட்டம்

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை படம் உலகம் முழுக்க கடந்த வியாழன் அன்று வெளியானது. பஹ்ரைனில் வெளியான இந்த படத்திற்கு அங்கு உள்ள அஜித் நற்பணி மன்றம் சார்பாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மணாமா பகுதியில் அமைந்துள்ள அல் ஹம்ரா திரையரிங்கில் பேனர்கள் வைத்தும், கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள அஜித் ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சு ராஜ்குமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் பன்னீர்செல்வம் மற்றும் ஜெயேந்திரன் கோபிநாத் அவர்களது தலைமையில் … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில்… ஒதுங்கியே இருக்கிறோம்?

நியூயார்க்:உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, ஐ.நா., பொதுச் சபையின் அவசர சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் ஒதுங்கியே இருக்க முடிவு செய்துள்ள இந்தியா, இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல், தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திடாமல் தவிர்த்துள்ளது.சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பின், அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வந்தது. … Read more

மணிப்பூர் மாநில தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது..!

இம்பால், 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.  இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.   கொரோனா தொற்றால் … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க வீரர் கெய்ல் வேரின்னே அதிரடி சதம்

கிறிஸ்ட்சர்ச், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது . அந்த அணியில்  சிறப்பாக விளையாடிய சரேல் எர்வீ சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அந்த அணி 364 … Read more

பாகிஸ்தான்: பஸ் – லாரி மோதி விபத்து – 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் வரை காயமடைந்துள்ளனர். முன்னதாக பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் மாவட்டத்தில் பயணிகள் பேருந்தும் லாரி ஒன்றும் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். மேலும் பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஜனவரியில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 3.7% வளர்ச்சி..!

இந்தியாவின் 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை ஜனவரி மாதம் தாண்டியுள்ளது. ஆனால் இந்த 8 முக்கியத் துறையின் உற்பத்தி அளவு டிசம்பர் மாதம் 4.1 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் ஜனவரி மாதம் 3.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. கச்சா எண்ணெய் இந்தியாவில் தொடர்ந்து 50வது மாதமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்து வருகிறது. கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது 2.4 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் விவசாய உரத்தின் … Read more

434 வாகன விபத்துக்களில் 457 பேர் உயிரிழப்பு

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் 25 ஆம் திகதி வரையில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் 434 . இதில் 457 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் மாத்திரம் பதிவான மரண எண்ணிக்கை 44 ஆகும். இந்த வாகன விபத்துக்களுக்கு முக்கிய காரணம் கவனயீனமாகும். இதனால் சாரதிகள் வீதி ஒழுங்குமுறைகளில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று  பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.