இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா என்பதை எப்படி அறிவது? அறிகுறி என்ன?

 உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா என்பது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கும் ஒரு நிலை. இது பொதுவாக உடலில் இன்சுலின் குறைவாக இருக்கும்போது அல்லது உடலால் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது நிகழ்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு டெசிலிட்டருக்கு 180 முதல் 200 மில்லிகிராம்களுக்கு மேல் செல்கிறது (எம்ஜி/டிஎல்). இப்படி இது அதிகரிக்கும் போது உயிருக்கே உலை வைத்து விடுகின்றது. எனவே இவற்றின் அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து … Read more

05/02/2022-7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு..! – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளத. அதிக பட்சமாக சென்னையில் 1223 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1,26,701 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 6,24,01,480 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று புதிதாக மேலும்  … Read more

பொருளாதாரத்தில் யோகி ஆதித்யநாத் அரசு உ.பி.யை 2-வது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது: ராஜ்நாத் கோவிந்த்

உத்தர பிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னணி தலைவர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று பா.ஜனதா மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் பொருளாதாரத்தை 31 லட்சம் கோடி ரூபாய்க்கு எடுத்துச் சென்றுள்ளது. இது இந்தியாவின் 2-வது இடமாகும். இதையும் படியுங்கள்… பஞ்சாப் தேர்தல்- … Read more

எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள்: அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம்- அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அலிகார் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ‘‘எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள். அனைத்து பிரச்சினைகளும் தீரும். சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பற்றி பேசுவோம். அலிகார் மக்கள் பா.ஜனதாவுக்கான கதவை மூடிவிட்டனர். பா.ஜனதாவின் விதிக்குக்கு பூட்டுபோட்டு சீல் வைத்துள்ளனர். மாவ் பகுதியில் நடைபெற்ற என்னுடைய முதல் கூட்டத்தில், லக்னோவில் உள்ள பா.ஜனதாவின் தலைமையகம், மற்றும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து மீதமுள்ள 20 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சூடுபிடிக்கும் பஞ்சாப் தேர்தல் களம்; காங். முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிப்பு: லூதியானாவில் ராகுல் பிரசாரம்

லூதியானா: பஞ்சாப் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, லூதியானாவில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவிக்கவுள்ளார். பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை அறிவிப்பதற்கு முன்பு, அக்கட்சி மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதேபோல, அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்று மக்களிடம் காங்கிரஸ் கருத்துக்கணிப்பு எடுத்துவருகிறது. தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. … Read more

டில்லியில் பள்ளிகள் திறக்க அனுமதி| Dinamalar

புது டில்லி: கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், டில்லியில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, ஒன்பது முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கார்களில் பயணிப்போர், முக கவசம் அணியத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது டில்லி: கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், டில்லியில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. … Read more

அரசுக்கு நிலம் வழங்கிய அடூர் கோபாலகிருஷ்ணன்

இந்தியாவிலேயே 16 தேசிய விருதுகள் பெற்ற ஒரே இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும் அத்தனையும் விருதுகளை குவித்த படங்கள். எலி பத்தாயம், நாலு பெண்ணுகள், சுயம்வரம், மதிலுகள் உட்பட பல புகழ்பெற்றத் படங்களை இயக்கியுள்ளார். கேரள அரசு தற்போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதனால் தேவைக்கு அதிகமாக நிலம் உள்ளவர்கள், அந்த நிலத்தை ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்காக வழங்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி … Read more

இருமடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. ரூ.2197 கோடி ரூபாய் நிகரலாபம்..!

பேங்க் ஆப் பரோடா இன்று அதன் மூன்றாவது காலாண்டு முடிவினைக் வெளியிட்டுள்ளது. இதன் நிகரலாபம் 107% அதிகரித்து, 2197 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 2088 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த செப்டம்பர் காலாண்டினை கட்டிலும் 5.2% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வட்டி வருவாய் இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் விகிதம் 14.4% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 13% அதிகரித்தும், 8552 கோடி ரூபாயாக உள்ளது. குளோபல் நிகர வட்டி … Read more

மாடர்ன் உடை, கூளிங் க்ளாஸ்… ஆளே மாறிப்போன கண்ணம்மா… வைரல் புகைப்படம்

Bharathi Kannamma Roshini Haripriyan Stylish Photo : விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே சந்தேகம் வந்தால் என்னவாகும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. அருண்பிரசாத் பாரதியாகவும், ரோஷ்னி ஹரிப்பிரியன் கண்ணம்மாவாகவும் நடித்து வந்த இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். நன்றாக போய்க்கொண்டிருந்த … Read more