மதுரையில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் சீமான்.! வெளியான அறிவிப்பு.! 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், “தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார்.  முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு; வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் … Read more

ஹிஜாப் சர்ச்சை: `சரஸ்வதி எந்த பேதமும் பார்க்கவில்லை' – ராகுல் காந்தி ட்வீட்!

கடந்த சில வாரங்களாகக் கர்நாடக மாநிலத்தில் புகைந்து கொண்டிருக்கும் ஹிஜாப் விவகாரம், தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. உடுப்பி மாவட்டம், குண்டாப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திடீரென ஒரு மாணவ வட்டம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். அதையடுத்து கல்லூரி நிர்வாகமும் உடனே, “முஸ்லிம் மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்துகொண்டு வரக்கூடாது!” என்று உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிக்கு … Read more

சடன் பிரேக் அடித்த லாரி மீது மோதிய அரசு பேருந்து -20க்கும் மேற்பட்டோர் படுகாயம் <!– சடன் பிரேக் அடித்த லாரி மீது மோதிய அரசு பேருந்து -20க்கும… –>

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி சடன் பிரேக் அடித்ததால்,லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழையனூர் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது இரும்பு லோடு ஏற்றி முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி, போக்குவரத்து நெரிசல் காரணமாக சடன் பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பேருந்து ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்தின் முன்பக்கம் … Read more

தமிழகத்தில் 7,000-க்கும் கீழ் குறைந்தது கரோனா தொற்று: சென்னையில் 1,223 பேர் பாதிப்பு – 23,938 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 7,524 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,04,762. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,41,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,28,151. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,223 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

கணவரைப் போல நாட்டுக்கு சேவை – கல்வான் தாக்குதலில் உயிர்நீத்த வீரரின் மனைவி 'ராணுவ அதிகாரி' தேர்வில் தேர்ச்சி

சென்னை: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்நீத்த மத்தியப் பிரதேச ராணுவ வீரர் நாயக் தீபக் சிங் என்பவரின் மனைவியும், தனது கணவரை போல நாட்டிற்கு சேவை செய்யும் பொருட்டு ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார். இதற்காக ராணுவத் தேர்வில் அவர் தேர்ச்சிபெற்றுள்ளார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி நள்ளிரவில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை நமது வீரர்கள் தடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 … Read more

கரோனா தொற்றால் பிரிட்டன் சுகாதார கட்டமைப்பு செயலிழப்பு?- உதவிக்கு ராணுவம் அழைப்பு

லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார கட்டமைப்பே செயலிழக்கும் அளவுக்கு சூழல் செல்வதால் அவர்கள் உதவிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் பிரிட்டனில் கரோனா தொற்று 90 ஆயிரத்துக்கும் … Read more

பெயரை மாற்றி ரீ பிராண்டிங்குக்கு தயாராகிறதா பேஸ்புக்? அமெரிக்க ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமா?

பேஸ்புக் சமூகவலைதளம் விரைவில் புதிய பெயருடன் ரீ பிராண்டிங்க்குக்கு ஆயத்தமாகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிகின்றன. சமூக வலைதள உலகின் ஜாம்பவான் பேஸ்புக். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஆக்குலஸ் என இன்னும் பல பிரபல சமூக வலைதளங்களையும் வைத்துள்ளது. கடந்த அக்டோபர் 4 ஆம் தேதியன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 6 மணி நேரம் வரை இந்தத் தளங்கள் முடங்கின. இதுவே பேஸ்புக்கின் மிகப்பெரிய அவுட்டேஜாகக் … Read more

விவாகரத்துக்கு காரணம் இதுதான்… முன்னாள் முதல்வரின் மனைவி புது கண்டுபிடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘முன்னாள் முதல்வரின் மனைவி என்பதை மறந்த, ஒரு பெண்ணாக நான் உங்களிடம் பேசுகிறேன். மும்பை மாநகர சாலைகளில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அவற்றில் உள்ள பள்ளங்களால் பொதுமக்கள் தினமும் எவ்வளவு சிரமத்துக்கு ஆளாகின்றனர் என்பதை நானும் அனுபவித்து வருகிறேன். மும்பை மாநகரில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க … Read more

மெஹா திட்டத்துடன் களமிறங்கும் ரஜினி.. இதென்னய்யா புது ட்விஸ்ட்…!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘ அண்ணாத்த ‘. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே … Read more

JioBook Laptop: லேப்டாப் பிராண்டுகள் ஷாக்… சந்தையில் கால்பதிக்கும் ஜியோ!

மொபைல் போன்களுக்குப் பிறகு மடிக்கணினிகளை சந்தைக்குக் கொண்டுவருகிறதா ஜியோ? என்ற கேள்வி இணையத்தில் உலா வருகிறது. இத்தகைய செய்திகள் பல தொடர்ந்து வெளிவந்தாலும், ஜியோ தரப்பில் இருந்து எந்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ஜியோ லேப்டாப் குறித்த புதிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. கசிந்த தகவல்களின் படி, ஜியோ புக் லேப்டாப் மலிவு விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ தரப்பில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் மடிக்கணினிக்கு ஜியோ புக் என்று பெயரிடப்படலாம் என … Read more