உ.பி: `ரூ.1.5 கோடி சொத்து… சொந்தமாக கார் இல்லை' – பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் யோகி!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. அதனால், அங்கு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் தனது பிரமாணப் பத்திரத்தில், 6 வங்கிக் கணக்குகளில் ரூ.1,54,94,054 ரொக்கமும், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போனும், ரூ.1 லட்சம் மதிப்புடைய கைத்துப்பாக்கியும், ரூ.80,000 ஆயிரம் மதிப்பிலான ரிவால்வரும், ரூ.49,000 … Read more

வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியல் வெளியீடு <!– வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த உண… –>

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தால் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் நிற்கவும், சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகள் வசந்த பவனில் நிற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் … Read more

புதுச்சேரியில் 344 பேருக்கு கரோனா தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக இன்று 344 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். நேற்று 431 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (பிப். 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”புதுச்சேரி மாநிலத்தில் 2,254 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி –224, காரைக்கால்- 74, ஏனாம்- 39, மாஹே- 7 என மொத்தம் 344 (15.26 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று … Read more

ராமானுஜர் சிலை திறப்பு: பிரதமருக்கு வரவேற்பு; தெலங்கானா முதல்வர் புறக்கணிப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை … Read more

ராணுவத்தில் ஓர் அங்கமாக தற்கொலைப் படை: ஐஎஸ் அச்சுறுத்தலால் தலிபான் முடிவு

ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் ஓர் அங்கமாக தற்கொலைப் படையை இணைக்க தலிபான் அரசு முடிவெடுத்துள்ளது. ஐ.எஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கின. ஆகஸ்ட் மத்தியில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தலிபான் ஆட்சி அமைத்த பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நிர்வாக ரீதியாகவும் பல மாற்றங்களை தலிபான்கள் செய்துவருகின்றனர். அந்த வகையில், ஆப்கன் ராணுவ நிர்வாகத்தில் தற்போது முக்கிய முடிவை … Read more

போலியான மைக்ரோசாப்ட் மென்பொருள் விற்பனை: சிபிசிஐடி போலீஸார் விசாரணை

சென்னை: கால்சென்டர்கள் நடத்தி, போலியான மைக்ரோசாப்ட் மென்பொருளை விற்பனை செய்தவர்களைப் பிடித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோசாப்ட் மென்பொருளை போலியாகத் தயாரித்து, குறைந்து விலைக்கு சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். பலர் இதை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். போலியான மென்பொருளை விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கால்சென்டர்கள் நடத்தி, வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களை சம்மதிக்க வைக்கின்றனர். சில பிபிஓ நிறுவனங்கள்கூட இந்த போலியான மென்பொருளைப் பயன்படுத்தி வருகின்றன. … Read more

வாரத்தில் 5 நாட்கள் வேலை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற அறிவிப்புக்கான அரசாணையை, மாநில அரசு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 73வது குடியரசு தினமான கடந்த மாதம் 26 ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநில அரசின் கொள்கை முடிவுகளை, முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார். அதன்படி, அரசு ஊழியர்களின் செயல் திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில், மாநில அரசு வாரத்தில் ஐந்து … Read more

லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்… ஐசியூவில் மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், மேலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரும் நீக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அதுக்காகதான் வெய்ட்டிங்… நயன் போட்டோவை … Read more

e-Passport: இ-பாஸ்போர்ட் என்றால் என்ன… காத்திருந்த காலம் எல்லாம் மாறிப்போச்சு!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 – 2023ஆம் நிதியாண்டுக்கான இந்திய பட்ஜெட்டை வெளியிட்டார். அவர் பட்ஜெட் உரையில் இந்த நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இ-பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு பல வசதிகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நேரத்தில் இ-பாஸ்போர்ட் என்றால் என்ன, அதன் பயன்பாடு என்ன, சாதாரண பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக இ-பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படும்? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும். அந்த கேள்விகளுக்கான அனைத்து விடைகளையும் இந்த செய்தி … Read more

இரகசியமாக கூடிய எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள்

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல்வாதிகள் அண்மையில் மிக இரகசியமான முறையில் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக எதிர்வரும் 10 ஆம் திகதியும் இரகசிய பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. இந்த இரகசிய பேச்சுவார்த்தையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒழுங்கு செய்திருந்தாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் … Read more