பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் கோலாகல தொடக்கம்.! <!– பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் கோலாகல தொடக்கம்.! –>

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சீனத் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. 91 நாடுகளைச் சேர்ந்த 2,875 வீரர்-வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். சீன அதிபர் ஷி ஜின்பிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்தார். புதின், இம்ரான்கான் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். தொடக்க விழாவில் ராட்சத ஐஸ் கட்டியில் வண்ண விளக்குகள் … Read more

விஜய்யின் சொகுசுக்கார் வழக்கு: "எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்!"- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் 2005-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ரக கார் வாங்கியிருந்தார். 63 லட்சம் மதிப்புள்ள இந்தக் கார் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விஜய் இந்த காருக்கான சுங்கவரியை முறையாகச் செலுத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருந்தார். இந்நிலையில் மாநில நுழைவு வரியைத் தமிழக அரசு வசூலிப்பதற்கான அதிகாரம் உள்ளது, எனவே விஜய் இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 காருக்கான மாநில நுழைவு வரியைத் தமிழ்நாடு … Read more

வீட்டுக்குள் மர்மநபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார்! சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் பரபரப்பு புகார்

சசிகலா புஷ்பா வீட்டு படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார் என இரண்டாவது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுகவில் முன்னர் எம்.பியாக இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர் இருந்தது குறித்து அவரின் 2வது கணவர் ராமசாமி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்தார். இதையடுத்து விசாரணை … Read more

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை – ராகுல் கண்டனம்

கர்நாடகா: பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை கண்டிக்கும் வகையில், தற்போது கர்நாடகாவில் குந்தபுரா பகுதியில் இஸ்லாமிய மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்களும் வர மாட்டோம். … Read more

லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில்  திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.  இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் … Read more

3 சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது – முன்னாள் முதல்வரின் மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: மும்பையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 3 சதவீத விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பதால் நான் தனிப்பட்ட முறையில் சிரமப்பட்டேன். நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, … Read more

எல்லையில் பதற்றம் நீடிப்பு: ரஷ்யா-உக்ரைன் ராணுவம் தீவிர போர் பயிற்சி

மாஸ்கோ: ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர விரும்புகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷியா உக்ரைனை நேட்டோ படையில் சேர்க்கக் கூடாது என்று அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. மேலும் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்று தெரிவித்துள்ள அமெரிக்கா ரஷியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை தாக்கினால் கடும் … Read more

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு..!!

டெல்லி: நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போலவே மீதமுள்ள நாட்களிலும் அவையை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

'டிஜிட்டல் விவசாயமே நாட்டின் எதிர்காலம்'!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் விவசாயமே எதிர்காலமாக இருக்கும்; இதன்மூலம் இளைஞர்கள் சிறப்பான பணிகளைச் செய்ய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடப்பு ஒன்றிய பட்ஜெட்டில் இயற்கை மற்றும் டிஜிட்டல் விவசாயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

கர்நாடக கல்லூரி மாணவரின் சூட்கேஸ் பெட்டிக்குள் காதலி| Dinamalar

உடுப்பி: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், விடுதிக்கு வந்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரின் ‘சூட்கேஸ்’ பெட்டிக்குள், அவரது காதலியான மாணவி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உடுப்பி மாவட்டம் மணிபால் அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் பலரும் விடுதியில் தங்கியுள்ளனர். சமீபத்தில் அவர்களில் ஒருவர் மிகப்பெரிய சூட்கேஸ் உடன் விடுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து, அதில் என்ன இருக்கிறது என … Read more