நீட் தேர்வை எதிர்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. திமுக, காங்கிரசை வெளுத்து வாங்கிய சீமான்.. வைரலாகும் வீடியோ.!

நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டியை எதிர்க்க திமுக மற்றும் காங்கிரஸ்க்கு என்ன தகுதி இருக்கு என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க்கோரி தமிழக அனைத்து கட்சி உறுப்பினர்களின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் இந்த தீர்மானத்தை … Read more

தென்காசி: முதுமக்கள் தாழிகளை உடைத்து தங்கப் புதையல் தேடும் கும்பல்? – நடவடிக்கை எடுக்கப்படுமா?!

தென்காசி மாவட்டத்தில் ஜம்புநதி கரையில் கடையம் கிராமம் உள்ளது. வரலாற்றுடன் தொடர்புடைய ஜம்புநதி மற்றும் ராமநதி பாயும் பகுதியில் இருக்கும் இந்தக் கிராமம் பழைமை வாய்ந்தது. இங்கு குப்பைகளை சேமிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் மூன்று ராட்சதக் குழிகள் தோண்டப்பட்டன. உடைந்து கிடக்கும் முதுமக்கள் தாழி குழிகள் தோண்டியபோது மண்ணுக்குள் புதைந்து கிடந்த பானைகள் உடைபட்டுள்ளன. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு அவை முதுமக்கள் தாழி என்பது தெரியாததால் சிலவற்றை உடைத்துள்ளனர். இது குறித்த தகவல் பரவியதும் பொதுமக்கள் … Read more

சரியான வாதங்கள், தெளிவான கருத்துகள்… சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்டமுன்வடிவை தமிழக … Read more

கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு – விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் இழப்பீடு: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு விண்ணப்பம் வந்த 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு … Read more

எதிர்ப்புக்கு பணிந்த அமெரிக்க நிறுவனம்: நெல்சன் மண்டேலா இருந்த சிறைச்சாவி ஏலம் நிறுத்தம்

நியூயார்க்: நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறையினுடைய சாவியின் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நெல்சன் மண்டேலா. இந்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் ரோபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில தினங்கள் முன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும் கர்ன்சேஸ் (Guernsey’s) என்கிற ஏல நிறுவனம், வரும் 28ம் தேதி மண்டேலா தங்கியிருந்த சிறை அறையின் சாவி … Read more

ஆன்லைன் பரிவர்த்தனையில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவில் சுமார் 100 கோடி டெபிட் கார்டுகளும், கிரெடிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் தினமும் கிட்டத்தட்ட 1.5 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதோடு ரூ.4,000 கோடி அளவுக்கான வர்த்தகம் நடைபெற்றுவருவதாக சமீபத்தில் நடந்து முடிந்த சிஐஐ (CII) கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வழியான பரிவர்த்தனையானது பலமடங்கு அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆன்லைன் மூலமான பரிவர்த்தனைகள் அதிகரித்துவருவதுபோலவே அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்துவருகின்றன என்பதைப் பயன்பாட்டாளர்களான நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதற்குத் தீர்வு காணும் … Read more

Dhanush:விட்டுக் கொடுக்காத தனுஷ், ஐஸ்வர்யா: ரசிகர்கள் வாழ்த்து

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு பிரிந்துவிட்டார்கள். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டது குடும்பத்தாருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. 2016ம் ஆண்டிலேயே பிரிவதாக முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் ரஜினி சமாதானம் பேசி சேர்த்து வைத்தாராம். பல ஆண்டுகளாக அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்பட்ட போதிலும் எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசி வந்திருக்கிறார் தனுஷ் . Dhanush:எல்லாம் உன்னால தான் அப்பா: … Read more

oppo watch free: AMOLED திரை, புதிய ஸ்டைல், பெரிய பேட்டரி – சூப்பர் ஸ்டைல் ஒப்போ ஸ்மார்ட்வாட்ச்

ஒப்போ நிறுவனம் பிப்ரவரி 4ஆம் தேதி தனது ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனுடன் தனது புதிய ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்சையும் அறிமுகப்படுத்தியது. இந்த தகவல் சாதனங்கள் முன்னதாகவே சீன சந்தையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்ச் (Oppo Watch Free) அமோலெட் (AMOLED) தொடுதிரையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் திரையின் அளவு 1.64″ அங்குலமாக உள்ளது. இது 280 x … Read more

இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து இராஜாங்க அமைச்சரின் தகவல்

இலங்கையில் முடக்கத்தை அல்லது பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தகவல் வெளியிட்டுள்ளார்.  நாட்டில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டும் வரும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பதில் வழங்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  இதன்போது மேலும் தெரிவிக்கையில்,  தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதோடு பூஸ்டர் … Read more

பெரு நாட்டில் சிறியரக விமானம் தரையில்மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு <!– பெரு நாட்டில் சிறியரக விமானம் தரையில்மோதி விபத்து – 7 பேர… –>

பெரு நாட்டில் பயணிகள் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பிரபல தொல்பொருள் ஆய்வு  தலமான Nazca Lines பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் டச்சு நாட்டினர் என்றும், 2பேர் சிலி நாட்டினர் என்றும் 2பேர் பெரு நாட்டினர் என்றும் போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் கூறும் போது செஸ்னா 207 ரக விமானம் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரெய்ச் விமான … Read more