டைகர் படத்தில் வில்லனாக உருவெடுத்த பி .வாசுவின் மகன் சக்தி

பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் 2007-ல் தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்த சக்திக்கு பின்னர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லை. பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் டைகர் என்ற படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சக்தி . இயக்குனர் முத்தையாவின் திரைக்கதை, வசனத்தில் … Read more

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 2020ல் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை மீறி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சாலை ஒன்றில் குடித்து, கும்மாளமிட்டுள்ளார். அவருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தும் ஒன்றரை ஆண்டுகளாக ஆறு முறை இதுபோல சட்டமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து லட்சுமி, அவரது நண்பர் ரவீந்திரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தொடரப்பட்ட வழக்கில் லட்சுமிக்கு, 10 வாரங்களும், ரவீந்திரனுக்கு எட்டு வாரங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

Longer live: இந்த நாடுகளில் மட்டும் மனிதர்கள் நூறாண்டு வாழும் ரகசியம் என்ன?

புதுடெல்லி: மரணம் என்றாலே அனைவருக்கும் அச்சம் இருக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பதும் என்பது அனைவருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம் தான். இன்று வாழ்க்கை முறைக் கோளாறுகள், உணவு முறை மாற்றங்கள், கலப்படம், மாசுபாடு என பல நோய்களால் மக்களின் வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. இளைஞர்களும் அகால மரணம் அல்லது கடுமையான நோய்களுக்கு பலியாகின்றனர்.இப்படி வாழுவதற்குக் அதிக பிரச்சனைகள் இருந்தாலும், உலகில் அதிகபட்ச … Read more

பட்ஜெட்டில் சொன்ன 400 வந்தே பாரத் அதிவேக ரயில்… குறுகிய காலத்தில் இலக்கை எட்ட முடியுமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என அறிவித்தார். 2019 இல் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, டெல்லியில் இருந்து வாரணாசி மற்றும் கத்ரா வரை, இரண்டு வந்தே பாரத் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பட்ஜெட் அறிவிப்பானது, என்ஜின்கள் இழுத்து செல்லும் ரயில்களுக்கு மாறாக, தானாக இயக்கப்படும் ரயில்கள் மூலம், இந்தியாவின் நூற்றாண்டு பழமையான ரயில்வே அமைப்புக்கு புதிய மாற்றத்திற்கான … Read more

#BigBreaking || நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் – சற்றுமுன் ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை.!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சற்று முன்பு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நீட் விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான அனைத்து சட்டப்படியான நடவடிக்கைகளையும் அதிமுக ஆதரிக்கும் என்றும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற … Read more

மதுபோதையில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

கடலூர் மாவட்டத்தையொட்டிய புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளான பாகூர், சோரியாங்குப்பம், முள்ளோடை, கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் பார்களுடன் இயங்கி வருகின்றன. இங்கு மது அருந்துவதற்காக கடலூரைச் சேர்ந்தவர்கள் நாள்தோறும் படையெடுப்பார்கள். அவர்களைக் கவர்வதற்காக இலவச ஆட்டோ மற்றும் டெம்போ சர்வீஸ்களை நடத்துகின்றன அந்த மதுக்கடைகள். புதுச்சேரி அரசு Also Read: விழுப்புரம்: 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது! அவர்களில் பலர் செலவு குறைவதற்காகவும், இயற்கை காற்றுடன் மது … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது நடவடிக்கை.. மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற அரசியல் பிரமுகருக்கு காலில் எலும்பு முறிவு..! <!– சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது நடவடிக்கை.. மாடியில… –>

விருதுநகரில் கட்சிக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அரசியல் பிரமுகரை போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் மாடியில் இருந்து குதித்து, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 28-ந் தேதி சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் விளைவிப்பது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு … Read more

ஒரே நாளில் இரு தேர்வுகள்… – கணிதப் பாடத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (NET) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதே நாளில், அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் … Read more

டெல்லி, காஷ்மீரில் கடும் நில அதிர்வு

டெல்லி: காஷ்மீர், டெல்லி பகுதிகளில் இன்று கடும் நில அதிர்வு ஏற்பட்டது. எனினும், இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கமாக காஷ்மீர், டெல்லி பகுதிகளில் கடும் நில … Read more

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வெளியே வந்தால் கைது: பிலிப்பைன்ஸ் அதிபர்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 … Read more