புத்தக கண்காட்சிக்கு நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்ததால் ஜனவரியில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி 45-வது புத்தக கண்காட்சி வருகிற 16-ந்தேதி முதல் மார்ச் 6-ந்தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நடக்கிறது. 500 பதிப்பாளர்களுடன் 800 அரங்குகளில் நடக்கும் புத்தக கண்காட்சியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி … Read more

இந்துபுரம் தலைமையில் மாவட்டம் அறிவிக்கக்கோரி நடிகர் பாலகிருஷ்ணா மவுன விரத போராட்டம்

திருப்பதி: ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள் பரப்பளவில் பெரியதாக இருப்பதால் பல்வேறு நிகழ்வுகள் சம்பந்தமாக மாவட்ட தலைநகருக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் நிர்வாக வசதிக்காக ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி … Read more

நெதர்லாந்தில் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு

ஆம்ஸ்டர்டாம்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் உருமாற்றங்கள் அடைந்து தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் எச்.ஐ.வி. வைரசின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எச்.ஐ.வி. வைரசின் மிகவும் கொடிய மாறுபாடாகும் என்று தெரிவித்துள்ளனர். … Read more

நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 9ஆம் தேதி கூட்டத்தை கூட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜம்மு- காஷ்மீர் மற்றும் உ.பி.யின் நொய்டாவில் லேசான நிலநடுக்கம்

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மற்றும் உ.பி.யின் நொய்டாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக காஷ்மீர், நொய்டாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

2.30 லட்சம் பேர் நலம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,30,814 பேர் நலம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,20,80,664 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,30,814 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,02,47,902 ஆனது. தற்போது 13,31,648 பேர் … Read more

சுந்தர்.சி படத்தில் இணைந்த ரைசா வில்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார் ரைசா வில்சன். விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் மற்றும் காதலிக்க யாருமில்லை, பொய்க்கால் குதிரை, ஆலிஸ் என அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய்யை வைத்து சுந்தர். சி இயக்கி வரும் புதிய படத்திலும் ரைசா வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா போன்ற நடிகைகள் … Read more

அமெரிக்காவில் வள்ளுவர் தெரு உதயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வடக்கு வர்ஜீனியா பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் வள்ளுவன் தமிழ் மையத்தின் முயற்சியால் இது நடந்துள்ளது.திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. திருக்குறள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சியும் நடந்துள்ளன. திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகப் புகழ் உண்டு. தற்போது திருவள்ளுவரை … Read more

பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ரூ.779 கோடி நஷ்டம்.. அப்படின்னா பங்கு விலை என்னாவது?

கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு பொது பங்கு வெளியீடானது இருந்தது. குறிப்பாக பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு வெளீயீடானது பெரியளவில் இருந்தது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது. எனினும் கடந்த ஆண்டில் மறக்கமுடியாத பங்கு வெளியீடு எனில், அது பேடிஎம் வெளியீடாகத் தான் இருக்கும். ஏனெனில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே பலத்த அடியினை கொடுத்தது. பின் டெக் நிதி நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் கடந்த ஆண்டில் பங்கு … Read more