கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ. 4 லட்சம் மானியம்; தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu construction workers : கட்டடத் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளைக் கட்டவோ அல்லது வாங்கவோ, தமிழக அரசு வழங்கும் ரூ. 4 லட்சம் மானியத் தொகையை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் வாரியம் அறிவித்துள்ளது. முதல்வர் சட்டமன்றத்தில், கட்டட தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடுகளைக் கட்டிக் கொள்ள ரூ. 4 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள்ளார். கட்டடத் தொழிலாளர்கள் வாரியத்தின் தலைவர் பொன் குமார் இது தொடர்பாக … Read more

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு.? வெளியாகப்போகும் அறிவிப்பு.!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனாவின் மூன்றாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.  குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளின் விளைவாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது.  இதனை தொடர்ந்து, ஊரடங்கு … Read more

உ.பி சட்டமன்றத் தேர்தல்: யோகிக்கு எதிராகக் களமிறங்கும் `தர்ணா' ஆசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக பா.ஜ.க மத்திய அமைச்சரை களத்தில் இறக்கி இருக்கிறது. பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சென்று நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில், கடந்த 26 ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக … Read more

"போ சாமி…" என்றதும் அமைதியாக காட்டுக்குள் சென்ற யானை <!– &quot;போ சாமி…&quot; என்றதும் அமைதியாக காட்டுக்குள் சென்ற யானை –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேருந்தை மறிக்க வந்த காட்டு யானையை, பழங்குடியின மக்கள் போ போ என பாசமாக சொல்லி காட்டுக்குள் அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. கோயம்புத்தூரில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து, தூமனூர் பிரிவை கடந்த போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை திடிரென பேருந்து நோக்கி ஆவேசமாக ஓடி வந்தது. பேருந்தில் பயணித்த பழங்குடி மக்கள், யானையை பார்த்து ”போ சாமி” என சத்தமிட, அது அமைதியாக … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின் நாளை முதல் காணொலி பிரச்சாரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். வரும் 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், திமுக … Read more

இந்தியாவில் புதிதாக 1.27 லட்சம் பேருக்கு கரோனா; பாசிட்டிவிட்டி 7.9% ஆக சரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேர் (நேற்றைய பாதிப்பு 1,49,394) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசிட்டிவிட்டி 7.9% ஆகக் சரிந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நாட்டில் தினசரி கரோனா பாசிட்டிவிட்டி 7.98% ஆகவும், வாராந்திர பாசிட்டிவிட்டி 11.21% ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது. கரோனாவில் குணமடைவோர் விகிதம் 95.64 % ஆக உள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: > கடந்த 24 … Read more

பிட்காயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத கடும் வீழ்ச்சி: 40 சதவீதம் சரிந்தது

நியூயார்க்: பிட்காயின் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்தியாவிலும் இந்த ஏற்றம் காணப்படுகிறது. பல நாடுகளில் ஏராளமான முதலீட்டாளர்கள் தொடர்ந்து கிரிப்ட்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்ட்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் … Read more

அடல் கண்டுபிடிப்பு தரவரிசை: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்

புதுடெல்லி: புத்தாக்கங்களுக்கான இந்திய அரசின் அடல் கண்டுபிடிப்பு தரவரிசையில் (ARIIA) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது 2021 ஆம் ஆண்டுக்கான அடல் புதிய கண்டுபிடிப்பு சாதனைகள் (ஏஆர்ஐஐஏ) குறித்த நிறுவனங்களின் தரவரிசையை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் இன்று அறிவித்தார். ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின்) தலைவர் பேராசிரியர் அனில் சகஸ்ர புதே, தொழில்நுட்பக் கல்வி கூடுதல் செயலர் ராகேஷ் ரஞ்சன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து … Read more

யாகபூஜை செய்து வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு வருகிற 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை அம்மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கி விட்டு ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பாஜக தீவிரம் … Read more

இதென்ன புது சோதனை..?: செம்ம கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்..!

கார்த்திக் நரேனின் ‘ மாறன் ‘ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார் தனுஷ் . இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் தனுஷின் ஹாலிவுட் படமான ‘ தி கிரே மேன் ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.. தனுஷின் இரண்டாவது ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, … Read more