நீட் விலக்கு: தமிழக முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்…

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு (2021) செப்.13-ம் தேதிசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கதாமதப்படுத்தியதால், முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து … Read more

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதையும் படியுங்கள்…அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது: அடுக்கடுக்கான கேள்விகளுடன் முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்

மார்ச் மாதத்தில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வரும்: ராஜேஷ் தோபே

ஜல்னா : நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா 3-வது அலை தலைவிரித்தாடியது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 48 ஆயிரம் பேர் தொற்றால் பதிக்கப்பட்டனர். இருப்பினும் 3-வது அலையின் போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் குறைவாகவே இருந்தது. இதுமட்டும் இன்றி கடந்த சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 15 ஆயிரமாக குறைந்துள்ளது. குறிப்பாக முக்கிய நகரங்களான … Read more

உக்ரைன் பதற்றத்துக்கு மத்தியில் புதின்-ஜின்பிங் நேரில் சந்திப்பு

பீஜிங் : ரஷியா மற்றும் உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் தற்போது உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சம் படை வீரர்களையும், தளவாடங்களையும் குவித்துள்ளது. இதனால் இருநாடுகளின் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க தயாராகி வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நம்புகின்றன. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லை என்று ரஷியா மறுத்து வருகிறது. ஆனாலும் அதை நம்பாத அமெரிக்கா … Read more

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியா கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அரும்பாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

தெலங்கானா: ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். சின்னஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பஞ்சலோக சிலை திறக்கப்படுகிறது. 

ரூ.13.14 கோடிக்கு சொகுசு கார் வாங்கினார் முகேஷ் அம்பானி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ அதிபரும், நாட்டின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானி, 13.14 கோடி ரூபாய் மதிப்பில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ காரை வாங்கி உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவன கார்களை வைத்திருப்பது உலக பணக்காரர்கள் மத்தியில் கவுரவ சின்னமாக கருதப்படுகிறது. இதில், பல்வேறு மாடல் கார்கள் உள்ளன. இந்த வரிசையில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ என்ற வகை கார் 2018ல் அறிமுகமானது. … Read more

சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் ஆக மாறிய ரஜிஷா விஜயன்

தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அந்த படத்தில் கூலி வேலைக்குச் செல்லும் சாதாரண கிராமத்து பெண்ணாக நடித்தவர், அதைத்தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் சமூக சேவகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள கீடம் என்கிற படத்தில் சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட்டாக நடித்துள்ளார் ரஜிஷா விஜயன். ஏற்கனவே கோகோ வீராங்கனையாக ரஜிஷா நடித்த கோக்கோ என்கிற படத்தை இயக்கிய ராகுல் … Read more

அமெரிக்க பஸ்சில் துப்பாக்கிச்சூடு பெண் பலி; நான்கு பேர் காயம்| Dinamalar

ஓரோவில்:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில், 43 வயது பெண் உயிரிழந்தார்; நான்கு பேர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் கிரேஹோண்ட் என்ற இடத்தில் இருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற பஸ், ஓரோவில் அருகே வந்தது. அப்போது, 21 வயது இளைஞர் ஒருவர், பயணியர் மீது திடீரென சுடத் துவங்கினார். இதில், 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியானார்; கர்ப்பிணி உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.தகவல் அறிந்து வந்த … Read more