அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து, மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும்
அங்கன்வாடி ஊழியர்கள்
, தங்களுக்கு
ஊதிய உயர்வு
அளிக்கக் கோரி, கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு கவுரவ ஊதியமாக 25 ஆயிரம் ரூபாய்; உதவியாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக
டெல்லி
மாநில அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:
டெல்லியில் அங்கன்வாடி பணியாளர்கள் அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் அதிக ஊதியம் பெறுவதாக ஆம் ஆத்மி அரசு பொய் சொல்கிறது. டெல்லியை விட தெலங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கவுரவ ஊதியம் அதிகம். அங்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 13,650 ரூபாய், உதவியாளர்களுக்கு 7,800 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கவுரவ ஊதியம் முறையே 12,200 ரூபாய் மற்றும் 8,650 ரூபாய். மேலும், டெல்லியில் சராசரி வாழ்க்கைச் செலவு தமிழகம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. எனவே, டெல்லி அங்கன்வாடி ஊழியர்களுக்கான கவுரவ ஊதியம் அந்த மாநிலங்களில் உள்ள பணியாளர்களை விட குறைந்தது 30 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து, டெல்லி அங்கன்வாடி ஊழியர்களின் கவுரவ ஊதியத்தை அதிகரித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, அங்கன்வாடி ஊழியர்களுக்கு 12,720 ரூபாய்; உதவியாளர்களுக்கு 6,810 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அரசின் இந்த ஊதிய உயர்வை ஏற்க அங்கன்வாடி ஊழியர்கள் மறுப்புத் தெரிவித்து விட்டனர். இந்த ஊதிய உயர்வு யானைப் பசிக்கு சோளப் பொறி வழங்குவது போல் இருப்பதாக அவர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.