அரியலூர் மாவட்டத்தில் செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுநர் லாரியை ஓட்டி வந்ததாக கூறப்படும் நிலையில், எதிரே வந்த அரசு பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
அரியலூரில் இருந்து வேணாநல்லூர் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்து, காட்டுபிரிங்கியம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அந்த சாலையில் எதிரே அரியலூர் நோக்கி சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்துக்கொண்டிருந்த டிப்பர் லாரி , திடீரென அரசு பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்தின் முன்பக்கம் மற்றும் வடதுபுறம் சேதமடைந்த நிலையில், பேருந்து ஓட்டுநர், பயணிகள் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். இதில் ஒரு பெண் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனை கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், லாரி ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே லாரி ஓட்டி வந்ததால் விபத்து நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.