மும்பை: மொகாலியில் வரும் 4ஆம் தேதி தொடங்கும் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
