ரஷ்யாவுடனான போர் 6ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதை நிரூபியுங்கள் என ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களிடம் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் அரசு நேற்று விண்ணப்பத்திருந்த நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காணொலி மூலம் செலன்ஸ்கி உரையாற்றினார்.
அதில், உக்ரேனியர்கள் தங்களின் நிலத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போரிட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தங்களை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் தாங்கள் வலிமையானவர்கள் என்றும் செலன்ஸ்கி குறிப்பிட்டார்.
இந்நிலையில், செலன்ஸ்கி உரையாற்றிய பின்னர், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.