உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் சம்மந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு என புடின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர் சண்டை தொடர்ந்து ஆறாவது நாளாக நடந்து வருகிறது.
இதனிடையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பெலாரஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்து.
பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்ததாகவும் அப்போது பொதுவான உடன்படிக்கை எட்டக்கூடிய சில அம்சங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய குழுவின் தலைவர் விளாடிமினி மெடின்ஸ்கி தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையை தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் தளவாடங்கள், ஆயுதங்கள் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டால் அதற்கு சம்மந்தப்பட்ட நாடுகளே பொறுப்பாகும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போர் 6வது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.