கீவ்: உக்ரைன் மீதான போர் தொடரும், பின்வாங்க போவதில்லை என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. பெலாரஸ் நாட்டில் நேற்று (பிப்.,28) நடந்த உக்ரைன் – ரஷ்யா பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், உக்ரைனின் கார்கிவ் நகரில் தற்போது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கார்கிவ் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதில் இந்திய மாணவர் ஒருவரும் உயிரிழந்தார்.
இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக பேசியுள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறுகையில், ‛ரஷ்யா போரை தொடரும், அதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. மேற்குநாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை உக்ரைன் மீது போர் தொடரும். எல்லா இலக்குகளையும் அடையும் வரை உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடரும். ஐரோப்பாவில் இருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா அகற்ற வேண்டும்,’ என்றார்.
கீவ்: உக்ரைன் மீதான போர் தொடரும், பின்வாங்க போவதில்லை என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. பெலாரஸ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.