ஒடிசா
மாநிலத்தில் கிராமப்புற
உள்ளாட்சித் தேர்தல்
நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 850 மாவட்ட ஊராட்சி பதவிக்களுக்காக, ஐந்து கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம 79 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனேகமாக அனைத்து இடங்களுக்குமான முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், ஆளும்
பிஜு ஜனதா தளம்
அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 851 இடங்களில் 786 இடங்களை கைப்பற்றி அக்கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
தேசிய கட்சிகான பாஜகவும், காங்கிரஸும் இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளன.
பாஜக
40 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
2017 ஆம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலைவிட தற்போது பாஜக குறைந்த அளவு வாக்குகளை பெற்றுள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிவ் மட்டும் நின்று, அதில் குறிப்பிடப்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, நாங்கள்தான் மாநிலத்தின் மூன்றாவது கட்சி என்று பாஜகவினர் பாரக்கிரமமாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.