கீவ்: உக்ரைனை யாராலும் வீழ்த்த முடியாது என்றும், ரஷ்ய தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும் எனவும் அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி ஐரோப்பிய பார்லிமென்டில் உரையாற்றியுள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா இன்று காலையிலிருந்தே தீவிரப்படுத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ஏவுகணை தாக்குதலிலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. குடியிருப்பு பகுதியிலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய பார்லிமென்டில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி உரையாற்றினார். அவரது உரை: எங்கள் நகரங்கள் அனைத்தும் இப்போது தடுக்கப்பட்டுள்ள போதிலும், நாங்கள் எங்கள் நிலத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடுகிறோம். உக்ரைனை வீழ்த்த யாராலும் முடியாது. நாங்கள் உக்ரேனியர்கள்; பலமாக இருக்கிறோம். உக்ரைன் மீதான தாக்குதல் போர் குற்றமாகும். உக்ரைனுடன் ஒன்றிணைந்து உள்ளதை ஐரோப்பிய ஒன்றியம் நிரூபிக்க வேண்டும். ரஷ்ய தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Advertisement