உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகத் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்டப் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்ய முடிவு செய்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யா- உக்ரைன் போரில் நடுநிலையை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இந்தநிலையில், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும். மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை போர் தொடரும்” என ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.