மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கடந்த 2 மாதத்தில் ஏற்பட்ட கடுமையான தடுமாற்றத்தில் அதிகளவிலான முதலீட்டை இழந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் லாபம் அளிக்கும் அதேவேளையில் பாதுகாப்பான முதலீட்டை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரீடைல் முதலீட்டாளர்களின் தேவையைத் தீர்க்க எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ-வுக்காகக் காத்திருக்கும் நிலையில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இன்றே கடைசி நாள்.. கண்டிப்பா இதை செய்திடுங்க.. எல்ஐசி IPO பலன் கிடைக்க அவசியம்!

உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து, மத்திய அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, லைப் இன்சூரன்ஸ் ஆப் இந்தியாவின் ஐபிஓ வெளியிடும் காலத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலை வரலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எல்ஐசி ஐபிஓ
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள காலகட்டத்திலேயே எல்ஐசி நிறுவனம் ஐபிஓ வெளியிடலாம், இந்திய வர்த்தகச் சந்தையை வைத்து தான் ஐபிஓ பணிகள் திட்டமிடப்பட்டு உள்ளது.

மறு ஆய்வு
ஆனால் சர்வதேச முதலீட்டு சந்தை சூழ்நிலையைக் கணக்கிட்டால் கட்டாயம் எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடும் காலத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றாலும் தவறில்லை, என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தற்போது மத்திய அரசு மறு ஆய்வு செய்தால் கட்டாயம் எல்ஐசி ஐபிஓ வெளியிடுவதை ஒத்துவைக்கலாம், ஆனால் கட்டாயம் மார்ச் 31-க்குள் வெளியிட வேண்டும் இல்லையெனில் மத்திய அரசு கட்டாயம் மிகப்பெரிய நிதிநெருக்கடியில் சிக்கிவிடும். இந்நிலையில் மத்திய அரசு இறுதி முடிவை வெளியிடும் வரையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் காத்திருக்க வேண்டும்.

65,000 கோடி ரூபாய் ஐபிஓ
லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருக்கும் 100 சதவீத பங்குகளில் வெறும் 5 சதவீத பங்குகளை இந்த ஐபிஓவில் விற்பனை செய்ய உள்ளது. இந்த 5 சதவீத பங்குகள் விற்பனை மூலம் மத்திய அரசு சுமார் 65,000 கோடி ரூபாய் (8.7 பில்லியன் டாலர்) அளவிலான தொகையைத் திரட்ட உள்ளது.

எல்ஐசி பாலிசிதாரர்கள்
மார்ச் 10-14 ஆம் தேதிகளில் ஐபிஓ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரு பங்கு விலை 2000-2100 ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் வெளியிடப்படலாம். மேலும் மத்திய அரசு நிறுவன முதலீட்டாளர்கள், ரீடைல் முதலீட்டாளர்கள் எனத் தனித்தனியாக ஐபிஓ-வில் பங்குகளை ஒதுக்கீடு செய்வது போல் எல்ஐசி பாலிசிதாரர்களுக்குத் தள்ளுபடி விலையில் பங்குகளை ஒதுக்கீடு செய்ய உள்ளது.
Govt may review timing of LIC IPO after Ukraine invasion
Govt may review timing of LIC IPO after Ukraine invasion எல்ஐசி ஐபிஓ ஒத்திவைப்பு.. நிர்மலா சீதாராமன் முடிவு என்ன..?!