ஒரு கிலோ அரிசி ஒரு வாரத்திற்கு இரண்டு பேருக்கு போதுமானது என நீர்ப்பாசன அமை்சசர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரு கிலோ அரிசி ஒரு வாரத்திற்கு போதுமானதாக இல்லை என்றால், அது பற்றி அறிவிக்குமாறும், தான் அது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது எனவும் அதனை தீர்த்துக்கொள்ள முடியும். ஒரு கிலோ அரிசியின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அரிசி 225 ரூபாய் முதல் 256 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 256 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ அரிசியை வாங்கினால், இரண்டு பேர் என்றால் ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்குமா?.
எனக்கு தெரியாது என்பதால் கேட்கிறேன். இவை பற்றி நாங்கள் அமைச்சரவையில் பேச வேண்டும், அதுதான் கேட்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.