புதுடில்லி: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்த இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டனர் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் சிரிங்காலா கூறியது, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அடுத்த மூன்று நாட்களில் சுமார் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளனன . புடா பெஸ்ட் புகாரெஸ்ட் நகரங்களை தவிர சுலோவாகியா போலந்து நகரங்கள் வழியாக இந்தியர்கள் மீட்கப்படுவர். கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இப்போது இல்லை, இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மனிதாபிமான அடிப்படையில் உதவி
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள், மீட்பு பொருட்கள் விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்க உள்ளது.மேலும் மற்றொரு விமானம் மூலம் உதவிப்பொருளும் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவ்வாறுவெளியுறவுத்துறை செயலர் தெரிவித்து உள்ளார்.
புதுடில்லி: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்த இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டனர் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.nsimg2973016nsimg இதுகுறித்து மத்திய அமைச்சர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.