குஜராத்தி மொழியில் படம் தயாரிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

குஜராத்தி மொழியில் படம் தயாரிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

குஜராத்தி மொழியில் படம் தயாரிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

3/1/2022 9:56:41 AM

நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் சார்பில் ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத் தயாரித்தார்கள். இப்போது இந்த தயாரிப்பு நிறுவனம், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடித்த, தமிழ் திரைப்படமான ஆண்டவன் கட்டளை படத்தை குஜராத்தி மொழியில் தயாரிக்கிறார்கள்.

இந்த ரீமேக் படத்தில் குஜராத்தி நடிகர் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் மனிஷ் சைனி இயக்குகிறார். தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இப்படம் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி என்றும், மேலும் குஜராத்தி திரையுலகில் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.