உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஆறாவது நாளாக தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் கடுமையான சண்டையிட்டு வருகிறது.
இந்த போரின் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது போர்
ரஷ்யா தாக்குதல் நடத்தியதில், உக்ரைன் நாட்டின் இணைய சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. தங்கள் நாட்டிற்கு யாரும் உதவ தயாராக இல்லை என உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி, ராணுவ வீரர்களுடன் களத்தில் குதித்தார்.
Satellite Broadband: வந்துவிட்டது BBNL வழங்கும் சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவை!
கடல், வான், நிலம் என பல்முனை தாக்குதல் நடத்திய ரஷ்யா, சைபர் தாக்குதலையும் உக்ரைன் மீது தொடுத்தது. இதன் காரணமாக திகைத்து நின்ற உக்ரைன் நாட்டிற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்
எலான் மஸ்க்
ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
அதாவது, தங்கள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வழி வழங்கப்படும் இணைய சேவையை உக்ரைன் நாட்டிற்கு பாதுகாப்பாக வழங்க ஸ்பேஸ் எக்ஸ் முன்வந்துள்ளது. இதற்காக உக்ரேனிய தொழில்நுட்ப பிரிவு அமைச்சர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அசைக்க முடியாத இணைய சேவை
ரஷ்ய படைகள் ஆக்கிரமிக்க முடியாத அண்டை நாடுகளின் எல்லைகளில் ரீசீவர் முனையங்களை நிறுவி, செயற்கைக்கோள் மூலமாக அலைகற்றை உள்வாங்கி, உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்குவதே,
SpaceX
நிறுவனத்தின் திட்டம்.
Russia Ukraine News: உக்ரைன் பெண்களை Tinder-இல் டேட்டிங்கிற்கு அழைக்கும் ரஷ்ய ராணுவத்தினர்!
ரஷ்யாவின் தாக்குதலால் எந்த விதத்திலும்
ஸ்டார்லிங்
இணைய சேவைக்கு தடங்கல் ஏற்படுத்த முடியாது. இந்த நிறுவனம், ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ‘Starlink’ இணைய சேவைக்காக வான்வெளியில் நிறுவி உள்ளது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியில் 46 செயற்கோள்களை ஸ்டார்லிங் இணைய சேவைக்காக ஸ்பேஸ் எக்ஸ் வான்வெளியில் நிறுவியது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா உக்ரைன் போர் வேகமெடுத்துள்ளதைத் தொடர்ந்து, உலக நாடுகள் பல சேதங்களைக் குறைக்க சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துமாறு ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகிறது. எனவே விரைவில், இரு நாடுகள் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஸ்டார்லிங் இணைய சேவை
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தனது நிறுவனத்தால் வழங்கப்படும் ஸ்டார்லிங்க் இணையச் சேவை விரைவில் பயனர்களுக்கு வணிகரீதிலாகக் கிடைக்கத் தொடங்கும் என்று கூறியிருந்தார். பார்தி நிறுவனமோ, 2022ஆம் ஆண்டின் மத்தியில் ‘ஒன் வெப்’ சேவையின் மூலமாக அனைவருக்கும் அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என்று சூழுரைத்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்ய கணினிகளை துவம்சம் செய்ய ஹேக்கர்கள் முடிவு; உக்ரைனுக்கு ஆதரவு!
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் (
Elon Musk
) ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) கீழ் இயங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் வணிகத்திற்காக ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தைப் பதிவு செய்துள்ளது.
டிசம்பர் 2022க்குள் இந்தியாவில் 2 லட்சம், ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு கருவிகள் நிறுவுவதை நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. இதில் 80% விழுக்காடு கிராமப்புற மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஸ்டார்லிங் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகளையும் இந்தியாவில் ஸ்டார்லிங் தொடங்கிவிட்டது என்பது கூடுதல் தகவல்.