உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 115 டொலர்களாக உயரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கணித்துள்ளார்.
எரிபொருளின் விலைகள் ஏறக்குறைய இரண்டு பவுண்ட்களால் அதிகரிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் என கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசாங்கத்தின் தோல்வியால் துவண்டுள்ள மக்கள் தற்போது மாற்று வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர்.
சர்வதேசத்தின் உதவியுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய ஒரே மாற்று ஐக்கிய தேசியக் கட்சிதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.