சுற்றி சுற்றி அடி வாங்கும் ரஷ்யா.. இனி இதிலும் பிரச்சனை தான்..!

உக்ரைனில் 6வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகள் குறிப்பிட்டு முக்கிய பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றது. உக்ரைன் படைகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ரஷ்யா படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆங்காங்கே பின்னடைவையும் சந்தித்து வருகின்றன.

கீவ் தாக்குதல் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், உக்ரைனில் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவால் அணு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. உக்ரைன் போர் பதற்றத்தால் BPCL-க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை!

தகவல் தொடர்பை சீர்குலைக்க திட்டமா?

தகவல் தொடர்பை சீர்குலைக்க திட்டமா?

இது குறித்து குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தொடர்புகளை சீர்குலைக்க ரஷ்யா முதலில் திட்டமிட்டதாக கூறியிருந்தார். ஆனால் அவர் கூறியதைபோலவே டிவி கோபுரத்தின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆக உக்ரைனை உலகின் பார்வையில் இருந்து விலக்க நடந்த திட்டமா? அல்லது வேறு பக்கங்களில் நடந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டதா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

வணிக உறவில் விரிசல்

வணிக உறவில் விரிசல்

அண்டை நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன. பல்வேறு தடைகளையும் விதித்து வருகின்றன. குறிப்பாக பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. பல நிறுவனன்ங்களும் ரஷ்ய நிறுவனங்கள் உடனான வணிக உறவினை முறித்துக் கொண்டு வருகின்றன.

முன்பதிவு நிறுத்தம்
 

முன்பதிவு நிறுத்தம்

இன்று காலை கனடா ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியினை தடை செய்தது. இப்படி ஒவ்வொரு தரப்பில் இருந்தும் ரஷ்யாவுக்கு அடுத்தடுத்த அடியாய் விழுந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சர்வதேச கண்டெய்னர் நிறுவனங்களான Maersk மற்றும் MSC உள்ளிட்ட நிறுவனங்கள், ரஷ்யாவுக்கு செய்யப்படும் கார்கோ புக்கிங் முன்பதிவுகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு முக்கியம்

பாதுகாப்பு முக்கியம்

இது அண்டை நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவம், அத்தியாவசிய தேவை பொருட்கள் மட்டுமே புக்கிங் செய்யப்படும். இது ரஷ்யாவிற்கும் ரஷ்யாவிற்கு வெளியிலும் முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மார்ஸ்க் தெரிவித்துள்ளது.

அக்கறை உண்டு

அக்கறை உண்டு

உக்ரைன் பிரச்சனையில் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். உலகளாவிய அளவில் நிலவி வரும் பதற்றத்தின் மத்தியில் சரக்குகள் தடுத்தல் போன்ற சில காரணிகளால் சப்ளை பாதிக்கப்பட தொடங்கியுள்ளது என மார்ஸ்க் கூறியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கு தடையில்லை

அத்தியாவசிய பொருட்களுக்கு தடையில்லை

இதே எம்எஸ்சி நிறுவனம் இன்று முதல் ரஷ்யாவிற்கு வரும் அனைத்து சரக்கு முன்பதிவுகளையும் நிறுத்தும். இது பால்டிக்ஸ், கருங்கடல் மற்றும் கிழக்கு ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளும் இதில் அடங்கும் என தெரிவித்துள்ளது. எனினும் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டெலிவரொ செய்வதற்கான முன்பதிவுகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

worlds top container shipping firms temporarily halt cargo bookings to and from russia

worlds top container shipping firms temporarily halt cargo bookings to and from russia/சுற்றி சுற்றி அடி வாங்கும் ரஷ்யா.. இனி இதிலும் பிரச்சனை தான்..!

Story first published: Tuesday, March 1, 2022, 23:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.