ஜெர்மனி நிறுவனத்தின் அதிரடி முடிவு..ரஷ்ய நிறுவனத்துடனான வணிகம் வேண்டாம்..!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான தாக்குதலானது ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டுள்ளது. எனினும் இன்று இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ள நிலையில், சற்றே தாக்குதல் ஓய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதலில் அப்பாவி மக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

இதற்கிடையில் உக்ரைன் தலை நகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்தது.

பதற்றம்

பதற்றம்

ஏற்கனவே அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்து வரும் மக்கள், உக்ரைனை விட்டு தொடர்ந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த இடைவெளியானது மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தாலும், இதிலிருந்து சுமூக நிலை எட்டப்பட வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

பொருளாதார தடை

பொருளாதார தடை

முன்னதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதற்கிடையில் நிதி ரீதியாகவும் ஸ்விப்ட் ஆப்சனை தடை விதிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில் பல நாட்டினை சேர்ந்த நிறுவனங்களும், ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக உறவினை முறித்துக் கொண்டு வருகின்றன.

வணிக உறவு வேண்டாம்
 

வணிக உறவு வேண்டாம்

ஜெர்மனியின் டைம்லர் டிரக் நிறுவனம், ரஷ்யாவின் கமாஸுடனான வணிக நடவடிக்கைகளை உடனடியான நிறுத்தி வைப்பது என்ற முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிறுவனம் ராணுவ தளவாட உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், ரஷ்ய நிறுவனத்துடனான உறவினை முறித்துக் கொள்வதாக டைம்லர் தெரிவித்துள்ளது.

ராணுவ வாகனம் தயாரிப்பாளர்

ராணுவ வாகனம் தயாரிப்பாளர்

டைம்லர் நிறுவனமும், கமாஸ் நிறுவனமும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டு முயற்சியின் மத்தியில் கமாஸ் மெர்சிடிஸ் டிரக்குகள் மற்றும் கேபின்களை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றது. சோவியத் யூனியனின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் ஒரு புறம் டைம்லருடன் இணைந்து செயல்பட்டு வந்தாலும், மறுபுறம் ரஷ்யாவின் ஆயுத படைகளுக்கு தேவையான வாகனங்களையும் உற்பத்தி செய்து வருகின்றது.

லாபத்தில் இழப்பு

லாபத்தில் இழப்பு

டைம்லர் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவானது லாபத்தில் இழப்பினை ஏற்படுத்தலாம். எனினும் டிரக் தயாரிப்பாளர் ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யாவில் சில ஆயிரம் யூனிட்களை மட்டுமே விற்பனை செய்து வருகின்றது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யாவுக்கு தான் இழப்பு

ரஷ்யாவுக்கு தான் இழப்பு

இதே போல ஐரோப்பியா பெரு நிறுவனங்களும், ரஷ்ய நிறுவனங்கள் உடனான உறவுகளை துண்டிக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளன எனலாம். நிச்சயம் இதனால் ரஷ்ய நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு தான். இது ரஷ்ய பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம். இந்த நிலையில் தான் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளது. இதன் மூலம் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே இங்கு அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Germany’s Daimler Truck may terminate its partnership with Russia’s Kamaz

Germany’s Daimler Truck may terminate its partnership with Russia’s Kamaz/ஜெர்மனி நிறுவனத்தின் அதிரடி முடிவு..ரஷ்ய நிறுவனத்துடனான வணிகம் வேண்டாம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.