ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக இணைவதற்கான உக்ரைனின் விண்ணப்பத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விடுத்திருந்து கோரிக்கையை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கான சிறப்பு சேர்க்கை நடைமுறை தொடங்கியுள்ளது.
இதன் போது காணொளி காட்சி மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் நிற்பதை நிரூபிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் மிகவும் வலுவாக இருக்கும், அது நிச்சயம். நீங்கள் இல்லாமல், உக்ரைன் தனிமையில் இருக்கும்.
நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் எங்களை கைவிடமாட்டீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நீங்கள் உண்மையில் ஐரோப்பியர்கள் என்பதை நிரூபிக்கவும், பின்னர் வாழ்க்கை மரணத்தை வெல்லும், ஒளி இருளை வெல்லும். உக்ரைனுக்கு மகிமை உண்டாகட்டும் என ஜெலன்ஸ்கி கூறினார்.
ஜெலன்ஸ்கி பேசி முடித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.
❗️Today, Volodymyr Zelensky spoke via conference in the European Parliament. After his speech in the #European Parliament, everyone gave a standing ovation. pic.twitter.com/VovbPFZYAh
— NEXTA (@nexta_tv) March 1, 2022