இன்று பங்குச்சந்தை வர்த்தகர்கள் அதிகளவில் எதிர்பார்த்துக் காத்திருந்த முக்கியமான டிசம்பர் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி அளவீடுகள் வெளியாகியுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்தது போலவே டிசம்பர் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி அளவு சரிந்துள்ளது, ஆனால் கணிக்கப்பட்ட அளவை விடவும் குறைந்துள்ளது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
2022ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவு.. ஏன் தெரியுமா..?!
டிசம்பர் காலாண்டு
மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட முதல் கணிப்பில் 2022ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.4 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் வெறும் 5.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
2022 நிதியாண்டு வளர்ச்சி
இதன் மூலம் 2022ஆம் நிதியாண்டின் மொத்த வளர்ச்சி கணிப்பை 9.2 சதவீதத்தில் இருந்து 8.9 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஆனால் டிசம்பர் காலாண்டைப் போலவே மார்ச் காலாண்டிலும் வளர்ச்சி அளவீடுகள் சரியை அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பெட்ரோல், டீசல் விலை..
இந்திய பொருளாதாரம்
இதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.9 சதவீத வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் இதன் மதிப்பு 147.72 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனத் தேசிய புள்ளியில் அலுவலகம் கணித்துள்ளது.
8 முக்கியத் துறை
மேலும் 8 முக்கியத் துறையின் வளர்ச்சி அளவீடு ஏப்ரல் – ஜனவரி காலகட்டத்தில் கடந்த ஆண்டு -8.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 11.6 சதவீதமாக உள்ளது. ஆனால் ஜனவரி மாதம் வெறும் 3.7 சதவீதமாகச் சரிந்துள்ளது.
நிதி பற்றாக்குறை
இதேபோல் நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை அளவு ஜனவரி மாத இறுதியில் 58.9 சதவீதத்தில் இருந்து 66.8 சதவீதமாக அதிகரித்து. இதன் மூலம் நாட்டின் நிதி பற்றாக்குறை அளவீடு 9,37,868 கோடி ரூபாயில் இருந்து 15.91 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
GDP Grows at just 5.4% In December Quarter
GDP Grows at just 5.4% In December Quarter டிசம்பர் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி வெறும் 5.4% மட்டுமே.. ஒமிக்ரான் எதிரொலி..!