உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நீடித்துவரும் நிலையில், ரஷ்ய ஜனாபதி புடின் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் மீது 6வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஆயுதங்கள் மற்றும் துருப்புகளை குவித்து வந்தபோது, உலக நாடுகளை நெருக்கடிக்கு தள்ளும் ஒரு சூழல் ஏற்படாது என்றே உலக நாடுகள் நம்பி வந்தன.
ஆனால் அமெரிக்கா மட்டும் ரஷ்யாவின் நகர்வுகளை கண்காணித்து வந்ததுடன், அதை வெளிப்படையாக அறிவித்தும் வந்துள்ளது.
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதுடன், அது மூன்றாம் உலகப்போருக்கான ஆயத்தமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லண்டனில் செய்தியாளர்களை சந்தித்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
விளாடிமிர் புடின் இரண்டு விடயங்களில் தப்புக்கணக்கு போட்டுவிட்டார் என காட்டமாக தெரிவித்துள்ள போரிஸ் ஜோன்சன்,
உக்ரைன் நாட்டின் பலத்தையும் மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமையின் வலிமையையும் புடின் குறைத்து மதிப்பிட்டு விட்டார் என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
முன்னர் செய்தது போன்று நேட்டோ நாடுகளை புறந்தள்ளிவிடலாம் என விளாடிமிர் புடின் எண்ணுகிறார் என்றால், அது உண்மையில் மிகப்பெரிய தவறாக அமையும் என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இது நேட்டோ நாடுகளை ஒருங்கிணைக்கும் என்பதுடன் அவர்களின் பலத்தையும் அதிகரிக்கவே செய்யும் என போரிஸ் ஜோன்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.