இந்தியாவின் கணினி சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் அமெரிக்காவினை சேர்ந்த முன்னணி கணினி நிறுவனமான ஹெச்.பி (HP Inc), 2021ம் ஆண்டில் 14.8 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மொத்த கணினி சந்தையில் 31.5% பங்கு வகித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.பி-யின் ஏற்றுமதியானது முந்தைய ஆண்டினை காட்டிலும் 58.7% அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து வணிக ரீதியாகவும், நுகர்வோர் சம்பந்தப்பட்ட அனைத்து சாதனங்களிலும் நல்ல வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
ஹெச்பி-யின் பெரும்பாலான ஹார்டுவேர் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
பல்டி அடித்த சீன நிறுவனம்.. ரஷ்யாவுக்கு வெளிப்படையாக ஆதரவு..?!
மேட் இன் இந்தியா ஃபார் இந்தியா
எனினும் தற்போது ஹெச்.பி தற்போது அதிகளவில் இந்தியாவில் இருந்தே பெறப் போவதாக தெரிவித்துள்ளது. இதனை மேட் இன் இந்தியா ஃபார் இந்தியா என்பதன் மூலம் மாற்ற நினைக்கிறது.
ஹெச்.பி நிறுவனம் நீண்டகாலமாக இந்தியாவில் கணினிகள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகின்றது. எனினும் தற்போது லேப்டாப் உற்பத்தியினையும் இங்கு தொடங்கியுள்ளது.
ஸ்ரீபெரும் புதூரில் தயாரிப்பு
அதோடு ஹெச்.பி-யில் எலைட் புக், ப்ரோபுக்ஸ் மற்றும் ஹெச்பி ஜி8 சீரிஸ் உள்ளிட்ட மடிகணினிகள் தமிழகத்தில் உள்ள, ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இந்த அளவுக்கு ஹார்டுவேர் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது இதுவே முதல் முறை. அதோடு மேக் இன் இந்தியா திட்டத்தில் களமிறங்கிய நிறுவனங்களில் ஹெச்.பி முதல் நிறுவனம். இப்போது உள்நாட்டிலேயே உதிரி பாகங்களையும் வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலேயே உற்பத்தி
இதுவரையில் ஹார்டுவேர்களை இறக்குமதி செய்து அதனை அசெம்பிள் செய்து வந்தோம். ஆனால் பிளெக்ஸ் மூலம் தற்போது இந்தியாவிலேயே உற்பத்தியினை மேம்படுத்தி வருகின்றோம். இதனை நாங்கள் கண்டிப்பாக இன்னும் விரிவுபடுத்துவோம். நாங்கள் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப், டிஸ்பிளேக்கள் என பலவற்றினையும் விரிவாக்கம் செய்வோம்.
உதிரி பாகங்கள்
இதுவரையில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அதனை வைத்து அதிகம் அசெம்பிள் செய்து வந்தோம். ஆனால் இனி அதனையும் உள்நாட்டிலேயே வாங்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும் உலகளாவிய தயாரிப்பினை எடுத்து இந்தியாவில் போட முடியாது. இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க தேவைகளுக்காக, குறிப்பிடத்தக்க வடிவமைப்பை சிறப்பாக செய்தால், அதனை பல நாடுகளிலும் பயன்படுத்த முடியும் என ஹெச்.பி தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு நல்ல வாய்ப்பு
மொத்தத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உற்பத்தியினை அதிகரிக்கலாம். இது தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். வளர்ச்சியினை அதிகரிக்க முடியும். வேலை வாய்ப்பினையும் இதன் மூலம் பெருக்க முடியும். மொத்தத்தில் இது தமிழகத்திற்கு மிக நல்ல வாய்ப்பே.
HP plans to focused on local procurement of sub components in India
HP plans to focused on local procurement of sub components in India/தமிழகத்திற்கு நல்ல சான்ஸ்.. ஹெச்பி-யின் அதிரடி திட்டம்..!