பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக துல்கர் சல்மான் மனம் திறந்துள்ளார்.
ஹே சினாமிகா படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
“’ஹே சினாமிகா’ ஒரு காதல் படம். பொதுவாக, படங்களில் காதலன், காதலி கடைசியில் ஒன்று சேர்ந்து திருமணத்துடன் படம் நிறைவடையும். ஆனால், ’ஹே சினாமிகா’வில் திருமணத்தில்தான் படமே தொடங்குகிறது. அதன்பிறகு, இருவருக்கும் நடைபெறும் சின்ன சின்ன பிரச்சனைகள், தவறாக புரிந்துகொள்ளுதல் போன்ற அனைத்தையும் காட்டும் விதமாக உருவாகியுள்ளது”.
ட்ரெய்லரில் ஹவுஸ் ஹஸ்பண்டாக வருகிறீர்களே… அப்படி, ஹவுஸ் ஹஸ்பண்டாக இருந்தால் அதிதி – காஜல் யாருடன் கம்ஃபர்டபிளாக உணருவீர்கள்?
“படத்தில் அதிதியுடன்தான் அப்படி நடித்துள்ளேன். மற்றபடி நிஜத்தில் எனக்கு அப்படி இருக்க ஆசைதான். என் மனைவி ஆர்க்கிடெக் படித்துள்ளார். ‘நீ திரும்ப ஆர்க்கிடெக் வேலைக்குப்போ. கம்பெனி வச்சிக் கொடுக்கிறேன். நான் குழந்தையைப் பார்த்துக்கிட்டு வீட்டுல இருக்கிறேன்”ன்னு சொல்வேன். ஏன்னா, வீட்டில் இருக்க எனக்கு டைம் கிடைப்பதே இல்லை. மனைவியும் மகளும் வீட்டில் இருப்பதைப் பார்த்துப் பொறாமையாக இருக்கும்”.
தயாரிப்பாளராக இருக்கும்போது உங்கள் கதையில் என்ன இருந்தால் படத்தை தேர்வு செய்வீர்கள்?
“ரொம்ப ஒரிஜினலாக இருக்கவேண்டும். மாறாக, ’இங்கு நடப்பது சரியாக இல்லை. எல்லாம் கெட்டுவிட்டது. நான் வந்துக் காட்டுறேன். நான் பண்றேன் பாருங்க’ என்ற அந்த ஆட்டிட்டியூட்ல வந்தால் பிடிக்காது. சினிமாவை நேசித்து இருப்பவற்றில் நல்லதை செய்கிறேன் என்று வந்தால் நான் தேர்வு செய்வேன். அதேபோல, நடிகராக கதையைக் கேட்கும்போது, நான் ரசிகனாக இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்குப் போவேனா? என்பதை யோசித்தே கதையைத் தேர்வு செய்வேன்”.
முழு பேட்டியை காண இந்த வீடியோ தொகுப்பை காணவும்;