காசோலை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை தவிர்க்க பாசிட்டிவ் பே சிஸ்டம் (Positive Pay System) என்ற விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதனை பல வங்கிகளும் படிப்படியாக அமலுக்கு கொண்டு வந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய காசோலை விதிமுறைகள் ஏப்ரல் 4 முதல் அதன் விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.
வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH
மோசடிகள் தவிர்க்கலாம்
பிஎன்பியின் புதிய விதிமுறைகளின் படி, 10 லட்சம் ரூபாய் அல்லது 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள காசோலைகளை, ஏப்ரல் 4 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டத்தின் கீழ், விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் பெரியளவிலான மோசடிகள் தவிர்க்க முடியும்.
பாசிட்டிவ் பே சிஸ்டம்
பாசிட்டிவ் பே சிஸ்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அளிக்கப்படும், காசோலை விவரங்கள், காசோலை எண், அது யாருக்கு கொடுக்கப்பட்டது, எவ்வளவு தொகை, மற்றும் காசோலை தேதி என பலவும் கொடுக்கப்பட்ட விவரங்களை, ஆன்லைனிலோ அல்லது நேரிடையாகவோ அல்லது மொபைல் மூலமாக வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
கட்டாயம் வங்கிக்கு தெரிவிக்கனும்
அப்படி தகவல்களை அளிக்கப்படாவிட்டால் அந்த பரிவர்த்தனை நிறுத்தப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தரப்பு கூறுகின்றது. இரு வேலை வாடிக்கையாளர்கள் தகவல்களை வங்கிக்கு தெரிவிக்க மறந்தாலும், வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ஒரு முறை கம்பார்ம் செய்து கொண்டு பின்னர் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என கூறியது. இதனை அனை வங்கிகளும் அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கூறி வருகின்றது. இது ஜனவரி 1., 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
இந்த வசதியைப் பெறுவது கணக்கு வைத்திருப்பவரின் விருப்பத்திற்கு உரியது. எனினும் 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலை மதிப்புக்கு வங்கிகள் கட்டாயம் இதனை பரிசீலிக்கலாம் என வங்கி கட்டுப்பாட்டாளர் தெரிவித்தது. இந்த நிலையில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கி 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை பரிவர்த்தனை செய்யும்போது வாடிக்கையாளரிடம் விவரங்களை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
பங்கு விலை நிலவரம்
இன்று பங்கு சந்தை விடுமுறை ஆதலால் முந்தைய அமர்வின் நிலையை பார்க்கலாம் வாருங்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி முந்தைய அமர்வில் சற்று குறைந்து, 34.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 48.20 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 31.75 ரூபாயாகும்.
PNB to clear cheques of Rs.10 lakh & above after conformation from April 4, 2022
PNB to clear cheques of Rs.10 lakh & above after conformation from April 4, 2022/பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகள் மாற்றம்.. ஏப்ரல் 4 முதல் அமல்.. கவனமா இருங்கப்பு!