அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்த்து தெரிவித்த ரஷியா, கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது உக்கிரமாக தொடர் தாக்கல் நடத்தி வருகிறது.
குண்டுமழை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதல் நடத்திவரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை சின்னாபின்னம் ஆக்கி வருகின்றன. இன்னும் ஒரு சில நாளில் ரஷிய படைகள் கீவ்வை கைப்பற்றிவிடும் என்று சொல்லும் அளவுக்கு வேகமாக முன்னேறி வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்வதற்காக கூலிப்படையினரை ரஷியா உக்ரைனுக்கு அனுப்பி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு, ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு 400 பேரை அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவை சுளுக்கெடுக்க.. உக்ரைனில் குவியும் ஆயுதங்கள்.. யார் யார் என்ன தர்றாங்க.. ஃபுல் லிஸ்ட்!
இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் ஒரு மாதத்துக்கு முன்பே நுழைந்துவிட்டதாகவும், உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல இந்த கூலிப்படையினருக்கு ரஷிய அதிபர் புதின் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது..
அத்துடன் ஜெலன்ஸ்கியின் அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் என மொத்தம் 23 பேர் ரஷியாவின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனராம்.
BREAKING: உருக்குலையும் உக்ரைன் – ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி!
தன்னை கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளது என்று ஏற்கெனவே குற்றம்சாட்டி இருந்த
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
, தன்னை கொல்வதுதான் ரஷியாவின் முதல் நோக்கம் என்றும், தன்னையும் தனது குடும்பத்தையும் அழித்துவிட்டால் நாட்டை அழித்து விடலாம் என்று ரஷியா கருதுவதாகவும் அண்மையில் கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதத்தில் ஜெலன்ஸ்கியை கொல்லும் நோக்கத்துடன் கூலிப்படையினர் கீவ் நகருக்கு நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.