மலேசியா,
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் ரஷியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷிய அணி கால்பந்து தொடர்களில் பங்கேற்க பிபா கூட்டமைப்பு ஏற்கனவே தடை செய்துள்ளது.
இந்த நிலையில் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலின் படி ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த வீரர் , வீராங்கனைகள் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. பேட்மிண்டன் தொடர்களின் பாதுகாப்பு தன்மை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
An update from #BWF in response to @iocmedia EB Recommendations👇 pic.twitter.com/C1dSt2a1ol
— BWF (@bwfmedia) March 1, 2022
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அமைதியை முன்னெடுத்து செல்ல தொடர்ந்து உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது