ப்ளூ சட்டை மாறனின் 'வலிமை' விமர்சனம்: சார்பட்டா பட நடிகர் வேம்புலியின் பதிலடி..!

நடிகர் அஜித்தின் ‘
வலிமை
‘ படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியான அஜித் படம் என்பதால் ‘வலிமை’ பட ரிலீசை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். ரசிகர்களின் வரவேற்பை போலவே இந்தப்படத்திற்கு பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.

அந்த வகையில் யூடியூப்பர் ப்ளு சட்டை மாறன் ‘வலிமை’ படம் குறித்தும், அஜித் குறித்தும் மோசமாக பேசியிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ பட புகழ், நடிகர்
ஜான் கொக்கன்
மாறனுக்கு எதிராக தன்னுடைய கண்டனங்களை தற்போது பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நீங்கள் ஒரு பெரிய திரை விமர்சகர். நான் ஒரு சாதாரண நடிகன். நீங்கள் விமர்சனம் செய்வது குறித்து ஒரு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது. சினிமா இருந்தால் நீங்களும் இருக்கிறீர்கள். சினிமா என்றாலே விமர்சனமும் சேர்ந்தது தான். விமர்சனம் சினிமாவை வளர வைப்பது. அதனால் தான் சினிமா விமர்சகன் மதிக்கப்படுகிறான். குறைகளை சுட்டிக் காட்டுவது எந்த அளவு தேவையோ, அதே அளவு பிறரை மரியாதையாக பேசுவதும் தேவை.

ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு அந்த இடத்திற்கு வந்து இருப்பார் என்பது உங்களுக்கே தெரியும். அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போதாவது நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள் என்பதே என் கோரிக்கை. நீங்களும் ஒரு படம் இயக்கி இருக்கிறீர்கள். அதன் வலி, வேதனை என்னவென்று உங்களுக்கும் புரியும். எந்தப் படைப்பாளியும், தன் படைப்பு வெற்றி பெற வேண்டும் என நினைத்தே படைப்பார்கள்.

தமிழ் சினிமாவைப் புரிந்து விமர்சனம் செய்யுங்கள். ஆனால், யாரையும் தனிப்பட்ட முறையில் கேவலமாக பேசுவதை தவிர்த்து மரியாதையுடன் விமர்சியுங்கள். இதுவரை நீங்கள் மோசமாக, கேவலமாக பேசிய விமர்சனங்கள் தான் அதிகம் இருக்கின்றன. அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. யார் வேண்டுமானாலும் பேசி விடலாம். திறமையாக பேசுவது தான் கடினம்.

விஜய்க்கு வந்த அதே பிரச்சனை இப்போ அஜித்துக்கு: ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழில் நல்ல சொற்கள் பல லட்சம் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு நல்ல மரியாதையான சொற்களால் நாகரீக விமர்சனம் செய்யுங்கள். இங்கே சினிமாவை நம்பி சினிமாவில் நிற்க வேண்டும் என்று என்னை போன்று பலர் இருக்கிறார்கள். அவர்களும் வளர வேண்டும். சினிமா இருந்தால் தான் இது எல்லாமே. அதனால், அடுத்து நீங்கள் விமர்சனம் செய்யும்போது ஆக்கப்பூர்வமாக விமர்சனம் செய்வது நல்லது.

தங்களின் விமர்சனங்கள் படைப்பாளிக்கு ஊக்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை புண்படுத்தும் விதமாகவோ திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களை தடுக்கும் விதமாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் இதைப் புரிந்து நடப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இது சினிமாவில் இருக்கும் ஒரு சிறிய நடிகனாக என் கோரிக்கை. நான் அஜித் சாரின் ரசிகன். அவர் ஸ்டைலிலேயே இறுதியாக ஒன்று “நீங்க என்ன வேணா பண்ணுங்க.. உங்களுக்கு பிடிச்சத பண்ணுங்க.. ஆனா அடுத்தவன மிதிச்சி முன்னேறணும்னு நினைக்காதீங்க.. வாழு வாழ விடு” என தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜான் கொக்கன். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வலிமை வெளியீடு; குதூகலத்தில் அஜித் ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.