மும்பை,
மராட்டியத்தில் இன்று புதிதாக 675 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 78 லட்சத்து 66 ஆயிரத்து 380 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 77 லட்சத்து 12 ஆயிரத்து 568 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 6 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் மேலும் 5 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதேபோல மாநிலத்தில் புதிதாக 104 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 733 பேருக்கு உருமாறிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 509 பேர் குணமாகி உள்ளனர். தலைநகர் மும்பையில் புதிதாக 77 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் எதுவுமில்லை.