மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி (CEO) சத்யா நாதெல்லாவின் (Satya Nadella) மகன் ஜைன் நாதெல்லா (Zain Nadella) திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 26. அறிக்கைகளின்படி, ஜெயின் பெருமூளை வாதம் என்னும் இந்த குறைபாடு இருந்தது. பெருமூளை பாதிப்படைவதால் ஏற்படும் பெருமூளை வாதம் அல்லது பெருமூளை முடக்கு நோயினால் பாதிப்படைந்தவரால் பொதுவாக நிற்கவோ நடக்கவோ இயலாது.
சாஃப்ட்வேர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜெயின் இறந்துவிட்ட தக்வல் குறிப்பிடப்பட்டுள்ளது. ” இறந்தவரது குடும்பத்தை மன தைரியம் அளிக்க பிரார்த்தனை செய்யவும். அதே நேரத்தில் பாதிக்கபட்டவர் தனிமையில் துக்கத்தை அனுபவிக்கும் வகையில், அவரது தனிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்”, என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!
“ஜெயின் இசையை ரசிக்கும் ரசனை மிக்கவராக இருந்தார். வெள்ளை உள்ளத்தை பிரதிபலிக்கும், அவரது பிரகாசமான புன்னகை எப்போதும் நினைவில் இருக்கும், அவரது குடும்பத்தினராலும், அவரை நேசித்த அனைவரலாலும் நிச்சய்மாக நினைவுகூரப்படுவார்” என்று குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் ஸ்பெரிங் தனது குழுவிற்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G