ரஷ்ய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் டிவிட்டர் தளத்தில் வெளியிடும் தகவல்கள் Flag குறியீட்டுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக ரஷ்ய ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் எங்கிருந்து ஆரம்பமானது என்பது குறித்த தகவலை இந்த flag குறியீடு பார்வையாளர்களுக்கு சுட்டிக்காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போர் தொடர்பாக பகிரப்படும் வதந்திகள் மற்றும் தவறான செய்திகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யப்படும் என டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய ஊடகங்கள் சார்பில் உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக ஒரு நாளைக்கு 45 ஆயிரத்துக்கும் அதிகமான டிவிட்டர் பதிவுகள் பகிரப்படுவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.