பாரிஸ்: உக்ரைன் – ரஷ்ய போரத் தொடர்ந்து ரஷ்ய செல்வந்தர்களின் சொகுசு கப்பல், கார்களுக்குத் தடைவிதித்து பிரான்ஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா மோதல் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுடன் உலக நாடுகள் யாரும் நேரடியாக மோத முடியாத சூழலில் பல்வேறு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ரஷ்யாவுடனான வர்த்தக தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் ரஷ்ய அரசியல் தலைவர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. கனடா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்தன. இதற்கு பதிலடியாக ரஷ்யா பல நாடுகளுக்கு ரஷ்ய வான் எல்லையில் அந்நாடுகளின் விமானங்கள் பறக்கத் விட தடை விதித்து பதிலடி கொடுத்தது.
இதனால் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. தற்போது ரஷ்யாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த பிரான்ஸ் இமானுவேல் மேக்ரான் அரசு ஐரோப்பிய யூனியனின் சர்வதேச கட்டுப்பாடுகளின்படி ரஷ்ய செல்வந்தர்களின் சொகுசு கார்கள், கப்பல்கள் ஆகியவற்றுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஃபிரான்ஸ் அருகே உள்ள மெடிட்டரேனியன் கடற்பரப்பில் சொகுசு கப்பல்களில் ரஷ்யா செல்வந்தர்கள் தங்கள் கோடைகால சுற்றுலாவுக்குப் பயன்படுத்திக் கொள்வர். தற்போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தொடர்ந்து மோதல்போக்கில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் பிரான்ஸுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்ஸ் வெஸ் லெ ட்ரியான் உறுதி செய்துள்ளார்.
Advertisement