உக்ரைன் போரில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழப்புக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார் என்பதை அறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1.உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார் என்பதையறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.#NaveenShekharappa
— Dr S RAMADOSS (@drramadoss) March 1, 2022
கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் கியெவ் மற்றும் கார்கிவ் நகரிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேற முடியவில்லை என்று செய்திகள் வெளிவருகின்றன. ஆபத்தான அந்த நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் விரைந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுபோல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் இரங்கல் செய்தியில், “உக்ரைனின் #கார்கிவ் என்ற இடத்தில் இன்று காலை கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற இந்திய மாணவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
It is sad & disappointing to hear that this morning an Indian student Naveen from Karnataka lost his life in shelling at #Kharkiv, Ukraine. I convey my deepest condolences to his family and friends.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 1, 2022