Apple நிறுவனம் இந்திய பணமதிப்பில் ரூ.20,000க்கு குறைவான விலையில் iPhone அறிமுகம் செய்ய உள்ளதாக் அத்தகவல் வெளியாகியுள்ளது.
Apple நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள iPhone SE 2022 அல்லது iPhone SE 3 என்ற புதிய மாடலின் விலை குறித்த தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது.
இந்த ஃபோன் மார்ச் 8-ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐஃபோனின் விலை 200 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று Apple நிறுவனத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Android ஃபோன்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆப்ரிக்கா, தென்னமெரிக்கா மற்றும் ஆசியாவின் ஒரு சில பகுதிகளை குறி வைத்து இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, Android ஃபோனுக்கு எங்கெல்லாம் மார்க்கெட் அதிகமோ, அங்கெல்லாம் இந்த புதிய மாடலை களமிறக்க Apple நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு, இந்திய ஸ்மார்ட்ஃபோன் விற்பனை சந்தையில் ஆப்பிளின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. இத்தகைய சூழலில், நியாயமான விலையில் ஒரு மாடலை அறிமுகம் செய்தால், அது போட்டியை உருவாக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது.
இது மட்டுமல்லாவில் சீனாவில் உள்ள தனது உற்பத்தி ஆலைகளை படிப்படியாக இடமாற்றம் செய்து இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டில் Apple நிறுவனம் அறிமுகம் செய்த iPhone SE மாடல் 399 அமெரிக்க டொலர்களுக்கு (ரூ.30,200) விற்பனை செய்யப்பட்டது. கடைசியாக 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட iPhone SE 2020 மாடலும் அதே விலையில் விற்பனையானது.