விஜய்க்கு வந்த அதே பிரச்சனை இப்போ அஜித்துக்கு: ரசிகர்கள் அதிர்ச்சி..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘
வலிமை
‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் ‘வலிமை’ படம் வெளியாகி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியான ‘வலிமை’ ரிலீசை திருவிழா போல் கொண்டாடினர் ரசிகர்கள். மேளதாளம், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். திரையிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பையும் பெற்று வருகிறது ‘வலிமை’. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது இந்தப்படம்.

இந்நிலையில் ‘வலிமை’ படம்
மெட்ரோ
படத்தை போன்று இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டு
ஆனந்த கிருஷ்ணன்
இயக்கத்தில் வெளியான படம் ‘மெட்ரோ’. சென்னையில் செயின் திருடர்கள் செய்யும் அட்டூழியங்களை மையமாக வைத்து உருவான இந்தப்படத்தில் சிரீஷ், ரம்யா, பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இனிமே அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை: மகள் மீது கடும் கோபத்தில் ரஜினி..!

இந்நிலையில் ‘வலிமை’ படத்தை தன்னுடைய படத்துடன் ஒப்பிடுவது குறித்து ‘மெட்ரோ’ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கூறும் போது, ‘இந்த இரண்டு படங்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு கூறுவது துரதிர்ஷடவசமானது என்றே கூறலாம். இந்த படத்தின் எப்டிஎப்எஸ் ஷோவை பார்த்ததிலிருந்து பலரும் என்னை தொடர்புகொண்டு இந்த இரண்டு படங்களின் ஒப்பீடு குறித்து இன்றுவரை கூறி வருகின்றனர். என்னை பொறுத்தவரை இதை நான் தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வாக தான் பார்க்கிறேன்.

இந்த படம் மிக அருமையாக ஓடிகொண்டிருக்கிறது, தமிழ் சினிமாவை மீண்டும் உயிர்பெற செய்யும் ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கிறது. மேலும் நான் ஒரு அஜித் ரசிகனாக அவரது அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். பொதுவாக
விஜய்
படங்கள் வெளியாகும் போது தான் இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படும். இந்நிலையில் அஜித்தின் ‘வலிமை’ படமும் கதை காப்பி பிரச்சனையில் சிக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.