அரசு பள்ளியில் ஹிஜாப் அணிந்து வர கூடாது என ஆசிரியர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியின் பணிபுரியும் லட்சுமி என்ற ஆசிரியர் மாணவியை ஹிஜாப் அணிந்து வரகூடாது என கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனால், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இது போன்ற சம்பவம் நடந்ததாகவும் அதற்கு மன்னிப்பு கேட்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வந்ததால் முற்றுகையிட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், தலைமையாசிரியரிடம் வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து, தலைமையாசிரியர் மன்னிப்புகேட்டு இது போன்றது நிகழ்வுகள் நடக்காது என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் 10க்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.