கீவ் நகரிலும், கர்கீவ் நகரிலும் ரஷ்யா நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல் குறித்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதி நவீன பிஎம் 21 ரக ஏவுகணை லாஞ்சர் மூலம் ரஷ்யா அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது.
மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இப்படி ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரஷ்யா தற்போது தாக்குதலுக்குப் பயன்படுத்தி வருவது பிஎம் 21 ரக ராக்கெட் லாஞ்சர்கள்தான். இதிலிருந்து 20 விநாடிகளில் 40 ராக்கெட்களை ஏவ முடியும். மிகப் பெரிய பாதிப்பை இந்த ராக்கெட்களால் ஏற்படுத்த முடியும். ரஷ்யாவிடம் உள்ள பிற ஏவுணைகளை விட இந்த ஏவுகணைகள் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவுதான் என்றாலும் கூட இதுவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதாகும்.
துள்ளிக் குதிக்கும் குழந்தைகள்.. கவலைகளற்ற நிம்மதி.. ஹங்கேரியில் அமைதி காணும் உக்ரைன்!
60களில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகள் இவை. கிராட் என்று இதற்குப் பெயர். சரமாரியாக நாலாபுறமும் ஏவுகணைகளை ஏவும் திறமை படைத்தவை இந்த லாஞ்சர்கள். சரமாரியாக பாயும் இந்த ஏவுகணைகளைத்தான் தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
கர்கிவ் நகரில் ரஷ்யா இந்த ஏவுகணைகளைத்தான் ஏவித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் இதை ரஷ்யா ஏவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி பொதுமக்கள் பலர் மரணமடைந்துள்ளதாக
உக்ரைன்
கூறியுள்ளது. டோனஸ்ட்ஸ் பகுதியில் உள்ள வோல்நோவாகா என்ற இடத்தில் மட்டும் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் 2வது பெரிய நகரமான கர்கிவ் நகரில் பொதுமக்கள் புழக்கம் உள்ள ஒரு சாலையில் வந்து விழும் ஏவுகணை குறித்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.