2021 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருதை வென்றார் பி.வி.சிந்து

தெலுங்கானா,  
உலக பாட்மிண்டன் தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவர் இந்தியாவின் பி.வி.சிந்து. இவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருந்தார்.

இந்த நிலையில் பாட்மிண்டன் துறையில் இவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக தெலுங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்  சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்  விருது இந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள தாஜ் டெக்கானில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
இந்த விருது வழங்கும் விழாவில் பி.வி.சிந்து உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், நடிகர்கள் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், சமந்தா ரூத் பிரபு போன்றோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.