NSE சித்ரா சென்னை வீட்டை ஆனந்த் மனைவி-க்கு விற்பனை.. 10 வருட தொடர்பு.. உண்மை வெளியானது..!

என்எஸ்ஈ அமைப்பில் பல முறைகேடுகளைச் செய்துள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை செபி, வருமான வரித் துறை, சிபிஐ என அரசு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா தனது சென்னை வீட்டை ஆனந்த் சுப்பிரமணியனுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

 என்எஸ்ஈ சித்ரா வழக்கு

என்எஸ்ஈ சித்ரா வழக்கு

இந்தியாவிலேயே மிக முக்கிய வழக்காகப் பார்க்கப்படும் என்எஸ்ஈ சித்ரா வழக்கு நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. முதலில் சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவியின் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி ஆனந்த் சுப்பிரமணியன்-ஐ நியமித்தது, அதிகப்படியான சம்பளம் கொடுத்தது, முறைகேடான வர்த்தகம், கோ லோகேஷன் பிரச்சனைகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 இமயமலை சாமியார்

இமயமலை சாமியார்

அதன் பின்பு சித்ரா 20 வருடமாக என்எஸ்ஈ-யின் பல ரகசியத் தகவல்களை இமயமலை சாமியார் ஒருவருக்குப் பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது, தொடர் விசாரணையில் இந்தச் சாமியார் ஆனந்த் சுப்பிரமணியன் தான் என உறுதி செய்யப்பட்டு உள்ளதாகச் சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 சென்னை வீடு விற்பனை
 

சென்னை வீடு விற்பனை

இந்நிலையில் தற்போது சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் மத்தியில் 10 வருடத்திற்கும் அதிகமான தொடர்பு இருப்பதும், செபியின் வழக்கு உச்சத்தை அடைந்த 2021ஆம் ஆண்டில் சித்ரா ராமகிருஷ்ணா தனது சொந்த சென்னை வீட்டை ஆனந்த் சுப்பிரமணியனின் மனைவி சுனிதா ஆனந்த்-க்கு விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

 சீதம்மாள் காலனி

சீதம்மாள் காலனி

என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா-வுக்குச் சொந்தமாகச் சென்னையின் மிக அழகான இடங்களில் ஒன்றான, சீதம்மாள் காலனி எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட் வீடு உள்ளது. இந்த வீட்டை ஆனந்த் சுப்பிரமணியன் மனைவி சுனிதா ஆனந்த்-க்கு சுமார் 3.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

 என்எஸ்ஈ வழக்கு

என்எஸ்ஈ வழக்கு

என்எஸ்ஈ வழக்கு உச்சக்கட்டத்தை அடைந்த காலகட்டமான பிப்ரவரி 23, 2021ல் சித்ரா தனது சீதம்மாள் காலனி வீட்டை ஆனந்துக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது ஆனந்த் சுப்பிரமணியன் தான் சித்ரா கூறும் இமயமலை சாமியார் எனக் கூறப்படுகிறது.

 3.2 கோடி ரூபாய்

3.2 கோடி ரூபாய்

விஷ்ராந்தி எனப் பெயர் கொண்ட அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் சுமார் 2081 சதுரடி வீட்டை சுனிதா ஆனந்த், சித்ரா-விடம் இருந்து சுமார் 3.2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். 50 வயதாகும் ஆனந்த் சுப்பிரமணியன் தற்போது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு சென்னையில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 10 வருட தொடர்பு

10 வருட தொடர்பு

2010ல் சித்ரா வாங்கிய இந்த வீட்டில் ஆனந்த் சுப்பிரமணியன் 2012 முதல் வசித்து வந்த நிலையில் 11 வருடம் கழித்து அதாவது 2021ல் சுனிதா ஆனந்த்-க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.

 சித்ரா புரியாத புதிர்

சித்ரா புரியாத புதிர்

ஆனந்த் சுப்பிரமணியன் 2013ல் தான் என்எஸ்ஈ அமைப்பில் சேர்ந்தார், ஆனால் 2012 முதல் சித்ராவின் சென்னை சீதம்மாள் காலனி வீட்டில் வசித்து வருகிறார். இதன் மூலம் பணி நியமனத்திற்கு முன்பே இருவருக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

NSE Chitra Ramkrishna sold Chennai house to Anand Subramanian’s wife in 2021

NSE Chitra Ramkrishna sold Chennai house to Anand Subramanian’s wife in 2021 NSE சித்ரா சென்னை வீட்டை ஆனந்த் மனைவி சித்ரா ஆனந்த்-க்கு விற்பனை.. 10 வருட தொடர்பு.. உண்மை வெளியானது..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.