ரஷ்யாவின் உக்ரைன் மீதான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்,அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ரஷ்யாவின் அடாவடி தாக்குதல் பற்றி குற்றம் சாட்டுகிறார். மேலும், மனித உரிமைக் குழுக்களும் ரஷ்யாவின் மீது மிகவும் பயங்கரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. .
திங்களன்று உக்ரேனியர்களை வெடிபொருட்கள் மற்றும் வேக்குவம் குண்டுகளால் தாக்கியதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகள் பரவலாக தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது என்று சர்வதேச மன்னிப்புச் சபையும், மனித உரிமை கண்காணிப்பகமும் (Amnesty International and Human Rights Watch) தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க | ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவை கோரும் உக்ரைன் அதிபர்
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த பின்னர், அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா செய்தியாளர்களிடம் பேசினார்.
மோதலில் ரஷ்யா வெற்றிட வெடிகுண்டு எனப்படும் தெர்மோபரிக் ஆயுதத்தை (thermobaric weapon) பயன்படுத்தியதாக அவர் கவலை தெரிவித்தார்.
“அவர்கள் இன்று வெற்றிட குண்டைப் பயன்படுத்தினார்கள்… ரஷ்யா உக்ரைனில் ஏற்படுத்த முயற்சிக்கும் அழிவு பெரியது” என்று மார்க்கரோவா கூறினார்.
வெற்றிட வெடிகுண்டு என்பது ஒரு தெர்மோபரிக் ஆயுதம், இது அதிக அளவிலான வெப்பநிலையை உருவாக்குக்ம். வளிமண்டலத்தில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சுவதன் மூலம் செயல்படும் பேராபத்து கொண்ட ஆயுதம் இது.
காற்றில் உள்ள ஆக்சிஜனை இந்த தெர்மோபரிக் ஆயுதம் உறிஞ்சுவதால், பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும்.
இது ஒரு வழக்கமான வெடிபொருளை விட நீண்ட கால வெடிப்பு அலையை உருவாக்குகிறது மற்றும் மனித உடல்களை ஆவியாக்கிவிடும் அளவு வீரியத்தை கொண்டுள்ளது. இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நேட்டோவை நம்பி ஏமாந்த உக்ரைன்?
இருந்தபோதிலும், உக்ரைனில் நடந்த மோதலில் தெர்மோபரிக் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
இந்த விவகாரம் குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சாகி, அவர் அறிக்கைகளைப் பார்த்ததாகவும், ஆனால் அதை உக்ரைன் மீது பயன்படுத்தியது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
“அது உண்மையாக இருந்தால், அது ஒரு போர்க் குற்றமாக இருக்கும்,” என்று அவர் ஒரு தெரிவித்தார்.
மேலும் படிக்க | விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி
மேலும் படிக்க | உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ