Ukraine News: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 182 இந்தியர்களுடன், ருமேனியாவில் இருந்து புறப்பட்ட 7வது சிறப்பு விமானம் இன்று காலை மும்பை வந்தடைந்தது. அதேபோல், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன்’ ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. மேலும், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம், ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஏற்கனவே 6 விமானங்களில் 1,400 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய இந்தியா முடிவு!
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளதாக’ ஐ.நா.வின் 11வது அவசர சிறப்பு கூட்டத்தில் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி அறிவித்துள்ளார்.
உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க தடை!
உலக ரக்பி போட்டிகளில் மறு அறிவிப்பு வரும்வரை ரஷ்யா மற்றும் பெலராஸ் பங்கேற்க தடை விதித்து உலக ரக்பி நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.
Ukraine News Live Updates
ரஷ்ய மக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு தடை!
ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், ரஷ்ய மக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு வெளிநாடுகள் வழங்கும் ஆயுதங்கள், ரஷ்ய நாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டால் அதற்கு அந்த நாடுகளே பொறுப்பு என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு கனடா அரசு தடை!
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், ரஷ்ய மத்திய வங்கி மீது தடை விதிப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இந்தியாவின் இளைய சக்தியை பார்த்து தான் உலக நாடுகள் பயப்படுகின்றன. தனித்த திறமையை மாணவர்கள் கண்டறிந்து செயல்பட வேண்டும். பட்டப்படிப்பை தாண்டி தனித்திறமை இருந்தால் தான் வெல்ல முடியும். படிப்பு என்பது திறமை சார்ந்ததாக மாற வேண்டும். நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை, கலைவாணர் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கான நான் முதல்வன்’ எனும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அனைத்து இளைஞர்கள் கல்வி, ஆராய்ச்சி, திறமையில் சிறந்தவர்களாக மாற்றவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நடிகர் ரஜினி வாழ்த்து!
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) March 1, 2022
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி மநீம கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து!
மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் @mkstalin பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க. pic.twitter.com/JGt9KWwdrt
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2022
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைப்பேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தங்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன் பிரதமரிடம் முதல்வர் உறுதியளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து!
நமக்காகவே நாளும் உழைக்கும் –
நமது முதலமைச்சர் தளபதி வாழிய வாழியவே!‘ சரித்திர நாயகரான’ நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று (1.3.2022) 69 ஆம் ஆண்டு பிறந்த நாள்! pic.twitter.com/ECJKCQwunf
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) March 1, 2022
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் தாய்நாட்டிற்கு அழைத்து வர 24 மணி நேரமும் மத்திய அரசு உழைத்து வருகிறது. 4 மூத்த அமைச்சர்கள், சிறப்புத் தூதர்கள் நியமிக்கப்பட்டு வெளியேற்றத்தை மத்திய அரசு எளிதாக்கியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மோடி அரசுக்கு நன்றி கூறியுள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவரும், தனது அண்ணனுமான ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு கனிமொழி எம்.பி. ட்வீட்டரில் சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து!
பெரியார்- அண்ணா – கலைஞர்- உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் தளபதி – அண்ணன் @mkstalin அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். pic.twitter.com/JM7lWpVgof
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 1, 2022
முதல்வர் ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்டர் பிறந்தநாள் வாழ்த்து!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்.@mkstalin pic.twitter.com/6VaY3uxMLU
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) March 1, 2022
உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து, ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட விரும்பும் வெளிநாட்டவர்கள் உக்ரைன் வரலாம் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு எளிதில் விசா அனுமதி கிடைக்கும்படி அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தொடர்ந்து 117-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துதல்: https://t.co/dOFBCKX2cJ
— M.K.Stalin (@mkstalin) March 1, 2022
அதேபோல் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல் https://t.co/KXIPCTqU4e
— M.K.Stalin (@mkstalin) March 1, 2022
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிடுகிறார்.
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 105 உயர்ந்து ரூ. 2145.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் நள்ளிரவில் திருடு போனது. இதுகுறித்து’ சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.