அடடா.. இது அருமையான யோசனை.. அசர வைத்த ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்..!

எப்போதும் சுறுசுறுப்பாக சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஆனந்த் மகேந்திரா, அவ்வபோது சுவாரஸ்யமான, யோசிக்க வைக்கும் படங்களையும், வீடியோக்களையும் பகிர்வது வழக்கமான விஷயம்.

அப்படி அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ பல ஆயிரம் பேரை ரசிக்க வைத்துள்ளது. யோசிக்கவும் வைத்துள்ளது.

உண்மையில் அப்படி என்ன தான் வீடியோவினை பகிர்ந்துள்ளார். முழு விவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ரஷ்யா சைபர் க்ரைம்-ஐ ஆயுதமாக பயன்படுத்த போகிறதா..? புதின் திட்டம் என்ன?! அமெரிக்கா கவலை?!

என்ன ஒரு யோசனை

என்ன ஒரு யோசனை

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில், என்ன ஒரு யோசனை சார்ஜி, நாங்கள் கால்வாய்களை மூடுவதன் மூலம் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறோம். ஆனால் இது கவரேஜை கணிசமாக அதிகரிக்கும். சைக்கிள் ஓட்டுபவர்கள் விரைவுச் சாலைகளை பயன்படுத்தாவிட்டாலும், இது பார்க்க தகுந்த ஒரு விஷயம். யாருக்கு தெரியும், ஒரு வேளை அது பொழுதுபோக்க சைக்கிள் ஓட்ட தூண்டும் என பதிவிட்டுள்ளார். அதனுடன் ஒரு வீடியோவினையும் பகிர்ந்துள்ளார்.

சோலார் பேனல்களுக்கு கீழ் சைக்கிள் பாதை

சோலார் பேனல்களுக்கு கீழ் சைக்கிள் பாதை

அந்த வீடியோவில் நெடுஞ்சாலைகளின் நடுவே சோலார் பேனல்கள், வழி நெடுகிலும் நிறுவப்பட்டுள்ளது. அந்த சோலார் பேனல்களுக்கு கீழாக சைக்கிள் பாதை ஒன்றும் உள்ளது. இது பொழுது போக்குகாக சைக்கிளை ஓட்டத் தூண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மகேந்திரா பதிவிட்டுள்ளார். நம்மூர் நெடுஞ்சாலைகளில் அழகுக்காக பூஞ்செடிகள், மரங்கள் என நிறுவப்பட்டிருக்கும்.

தென் கொரியா
 

தென் கொரியா

ஆனால் தென் கொரியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் தான் இத்தகைய அழகிய உள்கட்டமைப்பு வேலை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புறம் சோலார் பவர் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் சுற்றுசூழலும் பாதுகாக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் சைக்கிள் ஓட்டுபவர்களும் மற்ற போக்குவரத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். தனிமைப்படுத்தப்படுகின்றார்கள்.

பாதுகாப்பான பாதை

பாதுகாப்பான பாதை

ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ஒரு பயனர், சைக்கிள் ஓட்டுபவர்களை மறந்து விடுங்கள், இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான பாதையாக அமையும். இது நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். இந்த கருத்தினையும் ஆனந்த் மகேந்திரா ரீ ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கீரின் பெல்ட் & ரோடு இன்ஸ்டிடியூட் - ட்வீட்

கீரின் பெல்ட் & ரோடு இன்ஸ்டிடியூட் – ட்வீட்

தென் கொரியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையினை தான் கீரின் பெல்ட் & ரோடு இன்ஸ்டிடியூட் தலைவர் எரிக் சொல்ஹெயின, வீடியோவாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தான் ஆனந்த் மகேந்திரா ரீ ட்வீட் செய்துள்ளார். எரிக்கும் இந்த ட்விட்டர் பக்கத்தில் சோலார் பேனல்களுக்கு அடியில் ஒரு சைக்கிள் பாதை உள்ளது. சைக்கிள் ஓட்டுபவர்கள் சூரிய ஓளியில் இருந்து பாதுகாக்கபடுகின்றார்கள், போக்குவரத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறார்கள், மேலும் இதன் மூலம் நாடு சுத்தமான எரிபொருள் ஆற்றலை பெறும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

நிதின் கட்கரி

நிதின் கட்கரி

ஆனந்த் மகேந்திரா இந்த அசத்தலான வீடியோவினை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் டேக் செய்துள்ளார். உண்மையில் இது கான்போரை ரசிக்க வைப்போதோடு மட்டும் அல்ல, இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிக பயனுள்ள ஒரு விஷயமும் கூட. எதிர்காலத்தில் இந்தியாவிலும் இதுபோன்ற திட்டங்களை திட்டமிடுவது இந்தியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

what an idea sirji: Anand mahindra lauds south koreas’s solar panel system

what an idea sirji: Anand mahindra lauds south koreas’s solar panel system/அடடா.. இது அருமையான யோசனை.. அசர வைத்த ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்..!

Story first published: Wednesday, March 2, 2022, 20:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.